Friday, October 5, 2018

சரித்திர உவமை

இங்கிலாந்து தேசத்தில் *பிராங்க்மாரிசன்* என்ற வக்கீல் ஒருவர் இருந்தார். இவர் ஒரு முழு நாத்திகர். கடவுள் இல்லை என்று மறுப்பவர்.

இவர் *இயேசுவைப்* பற்றி எண்ணியிருந்த கருத்து என்னவென்றால், “ஒருவேளை *இயேசு* என்ற ஒருவர் பிறந்து உலகில் போதனை செய்தார் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அவர் மரணமடைந்து பின்னர் உயிரோடெழுந்தார் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.” என்பதுதான். 

இவர் தனது கருத்தை, தானே அடிக்கடி மெச்சிக் கொள்வார். மேடைகளிலும் இதனை குறித்து சொற்பொழிவாற்றுவார்.

இவருக்கு திடீரென்று ஒரு ஆசை வந்தது. தன் திறமையெல்லாவற்றையும் செலவிட்டு *இயேசு* உயிரோடு எழும்பவில்லை என்பது சம்பந்தமாக ஒரு புத்தகம் எழுதிவிட்டால் அது காலங்காலமாக மனிதர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுமே என்றெண்ணினார்.

மறுநாளே புத்தகம் எழுத உட்கார்ந்துவிட்டார். *வேதத்தை* மறுத்து எழுதவேண்டுமென்றால் முதலில் *வேதத்தை* முழுவதுமாக படிக்க வேண்டுமல்லவா?

மாரிசன் தாமதிக்கவில்லை. *பரிசுத்த வேதாகமத்தை* இரவு பகலாக படித்தார்.

வாசிக்க, வாசிக்க மறுப்பு வருவதற்கு பதிலாக வியப்பும், திகைப்பும் வந்தது. இன்னும் கொஞ்சம் ஆழமாக வாசிக்க கண்ணீர் வந்தது. தான் எத்தனை பெரிய பாவி என்று உணர்ந்தார். கடைசியாக புத்தகம் எழுதினாரா? ஆம், எழுதியே விட்டார். 

ஆனால்

கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்று எழுதுவதற்கு பதிலாக, *“இயேசு நிச்சயமாகவே உயிர்த்தெழுந்தார்.”* என்று ஆதாரப்பூர்வமாக புத்தகம் எழுதி முடித்தார்.

இவர் எழுதிய புத்தகம்தான் ஆங்கிலத்தில் மிகவும் புகழ்பெற்ற நூலான *“WHO MOVED THE STONE”* என்ற புத்தகமாகும்.

🌷🎊🌷

No comments: