Thursday, December 3, 2020

Settlement Deed /Gift Deed

1.செட்டில்மென்ட் பத்திரம் என்பதும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் என்பதும் ஒன்றுதான்.

2. ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு தன் வாழ்நாள் காலத்திலேயே பிரித்து கொடுக்கும் பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம் (அ) தான செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும்.

3. மேற்படி செட்டில்மெண்ட் பத்திரம் குடும்ப உறவினருக்கு மட்டும்தான் போட முடியும். தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை ஆகியோர் மட்டும் உறுப்பினர்களாக பத்திர அலுவலகம் ஏற்று கொள்கிறது.

4. குடும்ப உறுப்பினர் இல்லாதவருக்கு கொடுக்க நினைத்தால் அதற்கு “ தானப் பத்திரம்” போட வேண்டும். ( GIFT DEED) இறந்த பிறகு செட்டில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உயில் எழுத வேண்டும்.

5. செட்டில்மெண்ட் பத்திரம் கொடுத்து விட்டு பிறகு மனம் வருத்தப்பட்டு செட்டில்மெண்டை ரத்து செய்கின்றனர். இப்படி ரத்து செய்வது சட்டப்படி செல்லாது என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது.

6. பத்திர பதிவு அலுவகத்தில் செட்டில்மெண்ட் பத்திரத்தை கடந்த 5௦ ஆண்டுகளாக ரத்து செய்கின்ற செட்டில்மெண்ட் ரத்து பத்திரம் போடுகின்றனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகள் இரத்து செய்யும் செட்டில்மெண்ட்டுக்கு எதிராக வந்தாலும் தற்போது சில இடங்களில் செட்டில்மெண்ட் பத்திரத்தை இரத்து செய்வதில்லை. சில இடங்களில் பத்திரத்தை இரத்து செய்கின்றனர்.

7. ரத்து செய்யும் செட்டில்மெண்ட் பத்திரங்களை நீதிமன்றத்திற்கு போகும் பொழுது நீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்கின்றது.

8. விற்ற சொத்தை எப்படி திரும்ப வாங்க முடியாதோ அதேபோல் தானம் செய்த சொத்தை திரும்ப வாங்க முடியாது.

9. கண்டிசன் செட்டில்மெண்ட் பத்திரம் என்று ஒன்று இருக்கிறது. எழுதி வைப்பவர் தன் வாழ்நாளுக்குப் பிறகு தான் சில சொத்துக்கள் தன் உறவுகளுக்கு போக வேண்டும் என்று உயிலை போல் எழுதி வைப்பர்.

10. தனி தனியாக குடும்பத்தினர் வாழ்ந்தாலும் சொத்து பொதுவில் இருந்தால் அது கூட்டு குடும்ப சொத்து, அதேபோல் அக்காலத்தில் எல்லா சகோதர்களும் ஒரே வீட்டில் வாழ்ந்து ஒரு தலைவரின் கீழ் அனைவரும் செயல்படுவர், அது பழைய இந்து கூட்டு குடும்ப சொத்துக்கள் எனலாம்.

11. மேற்படி கூட்டு குடும்ப சொத்தை தன் மகன்களுக்கு பிரித்து கொடுப்பதுதான் குடும்ப ஏற்பாட்டு பத்திரம், இப்பொழுது கூட்டு குடும்பம் அரிதாகி விட்டாலும், தனி குடும்பத்தில் தன் மகனுக்கு மகளுக்கு சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்கின்றனர். அவையும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் ஆகும்.

12. செட்டில்மெண்ட் எழுதி கொடுத்தவர், மேஜராகவும், நல்ல மன நிலைமையிலும், யாருடைய கட்டாயமோ, மிரட்டலோ இல்லை என்று தெரிந்திருந்தால் தான் அந்த செட்டில்மெண்ட் செல்லும்.

13. IN PRESENTI ( இன் ப்ரசண்டி செட்டில்மெண்ட்) என்பது செட்டில்மெண்ட் பத்திரம் செய்தவுடன் சுவாதீனத்தை கொடுப்பது இது மிக நல்ல செட்டில்மெண்ட் ஆகும்.

14. சில செட்டில்மெண்ட் சுவாதீனம் அடைவதற்கு சில கண்டிசன்கள்போட்டிருப்பர். அதாவது எழுதி கொடுத்தவர் காலத்திற்கு பிறகுதான் சுவாதீனம் என்று இருக்கும்.✅🔸

No comments: