காலை உணவுடன் சேர்த்து அருந்த வேண்டிய பழ மற்றும் காய்கறி சாறுகள் - இயற்கை மருத்துவம்
உடல் ஆரோக்கியத்துக்கு அதிகமாகப் பலனளிக்கும் அதேநேரம், உடம்பை எந்த வியாதியும் நெருங்காமல் தடுக்கும் பணியையும் பழச்சாறுகள் செய்கின்றன. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறையை உடனே சரிசெய்ய பழச்சாறு பருகுவதே சிறந்த வழி.
கேரட் சாறு :
கேரட் சாறு எடுத்து அருத்தும் போது கண்பார்வை குறைபாடு, நீரிழிவு வியாதி, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பிரச்சனைகள் மற்றும் மூட்டு வலி, வீக்கம் ஆகிய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பிட்ரூட் சாறு :
பிட்ரூட் சாறு எடுத்து அருத்தும் போது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிலக்குப் பிரச்சினைகள், சிறுநீரக குறைபாடுகள், இதய நோயாளிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
நெல்லிக்காய் சாறு :
நெல்லிக்காய் சாறு குடிப்பதால் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். நெல்லிக்காய் ஜூஸ் பருகிவிட்டு வாக்கிங் செல்வது, அல்லது வாக்கிங் செய்த பிறகு நெல்லிக்காய் ஜூஸ் பருகுவது நல்ல மாற்றத்தை காண உதவும்
வெள்ளரி சாறு :
வெள்ளரி சாறு உடல் எடையை குறைக்க உதவும், சிறுநீரகக் குறைபாடுகள் மற்றும் மூட்டு வலி, வீக்கம் ஆகிய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
முட்டைக்கோஸ் சாறு :
இந்த சாறு வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் உடல் எடையை குறைக்க உதவும்.
இது தவிர காய்கறி மற்றும் பயறு வகைகளை வேக வைக்க பயன்படுத்திய நீரையும் அருந்தலாம்.
தர்பூசணிப்பழச் சாறு :
கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது சிறுநீரக கல்லடைப்பு, சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.
அத்திப்பழச்சாறு :
அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம். இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..
ஆப்பிள் பழச்சாறு:
ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சைச் சாறு :
திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சுச் சாறு:
தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும்.
திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும்.
ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும்.
குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சைச் சாறு :
நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்ற பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.
இளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும்.
உடல் களைப்புகள், கை, கால் கணுக்களில் ஏற்படும் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.
தக்காளிச் சாறு :
தக்காளிச் சாற்றை காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.
கறிவேப்பிலை :
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, தேங்காய் தேவைக்கு, இஞ்சி ஒரு சிறு துண்டு, சிறிது நாட்டு சர்க்கரை, தண்ணீர் தேவைக்கு சேர்த்து அரைத்து வடிகட்டி பருகவும். சுவை அருமையாக இருக்கும், பெண்களுக்கு மிகவும் சிறந்தது, உடலில் இரும்பு சத்து ஏற்படும், நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல் மற்றும் நடுக்கம் தீரும்.
எல்லா வகையான பழ சாறுகளும் உடலுக்கு நன்மை தருவது தான்.
குறிப்பிட பருவங்களில் ஒரு சில பழங்கள் அதிகம் கிடைக்கும் அந்த பருவ கால பழங்களை சாறாக அருந்தலாம்.
No comments:
Post a Comment