Friday, October 5, 2018

இரத்த செல்களை அறிவோம்...

இரத்த செல்களின் வகைகள் - 3

1. இரத்த சிவப்பு அணுக்கள் :

இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்

இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை

இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்

ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்

பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்

ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்

பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்

இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)

இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள் :

இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியு கோசைட்டுகள்

இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி

இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்

இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியு கோபினியா

இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லு}கீமியா

உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்

லியு கோசைட்டுகள் வகைகள் - 2
துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் - 3
நியு ட்ரோஃபில்கள் - (60 - 70மூ)

இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0மூ)

பேசோஃபில்கள் - 0.1மூ

துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2

லிம்போசைட்டுகள் - (20 - 30மூ)

மோனோசைட்டுகள் - (1 - 4மூ)

3. இரத்த தட்டுகள் :

இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)

இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்

இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்

இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000...

No comments: