Friday, October 5, 2018

சச்சின் டெண்டுல்கரின் உரை

மாநிலங்களவை உறுப்பினர் சச்சின் டெண்டுல்கர் உரை:

விளையாட்டிற்கான அற்புதமான உரை.

படியுங்கள். இதில் சில முத்தாய்ப்புக்கள்.

1.பள்ளி சிறுவர்கள் விளையாடுவதற்காக முழு உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

2. தேர்வு என்றாலே ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் விளையாட்டுக்கு எதிரான கூட்டணி அமைத்து கொண்டு விடுகிறார்கள்.

3. பள்ளிகளில் அடிக்கடி ரத்து ஆகிறது வகுப்பு, விளையாட்டு நேரம்.

4. நம்மில் பலர் வெறுமனே விவாதிக்கின்றோம். விளையாடுவதே இல்லை.

5. விளையாட்டை விரும்புகிற தேசமாக இருக்கின்றோம். விளையாட்டை விளையாடும் தேசமாக மாறவேண்டும். ( மீண்டும் படியுங்கள்)

6. தொலைக்காட்சி முன்பு மணிக்கணக்கில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பவர்களின் மிக பெரும்பான்மையானோர், எந்த விளையாட்டு மைதானத்திலும் ஒரு முறை கூட கால் வைத்தது இல்லை.

7. மிக இளமையான நாடான இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம்.

8. உடல் பருமனில் உலகில் 3வது இடம்.

9. விளையாட்டு வீரர் 35 அல்லது 40 வயதுக்கு பின் பொருளாதார சிக்கல். பயிற்சியாளராக ஆக்கப்பட வேண்டும்​.

10. 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமை சட்டம் போல விளையாட்டு உரிமை சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

No comments: