இன்னைக்கு காலையில எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற எலும்பிச்சை மரத்தில் இருந்து பழுத்து உதிர்ந்த கனி ஒன்றை என் கையில் எடுத்து வந்தேன்..
அதை நுகர்ந்து பார்த்த போது வாசமாக இருந்தது மனதுக்கு சுகமாகவும் இருந்தது...
அதை நகங்களால் கிள்ளினேன் இன்னும் அதிக வாசனை...
அதிகமாக கிள்ள கிள்ள கிறங்கடிக்கும் வாசனை...
நறுக்கினேன் அபார வாசனை..
பிழிந்து அருந்தியதற்கு பின்னே எலும்பிச்சை முக்தியடைந்தது....
இந்த பழத்தின் முழுமையை வெளி கொணரவே இவ்வளவு வேலையிருக்கிறதே...
இவ்வளவிற்கும் இந்த பழம் முழுமையாக தன்னை சரணாகதி செய்துவிட்டது....
மனிதர்களாகிய நமது தனித்துவும் வெளிபட....
சாதாரண மனிதன் 10000 சம்பாதிக்கிறான்...
இன்னும் அதிகம் அதிகம் முயற்சிப்பவன் 100000
இன்னும் இன்னும் இன்னல்களை தாங்கி அடித்து பிழிந்து இன்னல்களை தாங்கி ஒரு நிலைக்கு கொணர பட்டவன் கேட்கவா வேண்டும் அவனுக்கே அபார வளர்ச்சி....
இதுவே ஆன்மீக வளர்ச்சியிலும்....
நண்பர்களே இன்னல்களை கண்டு கலங்க வேண்டாம்....
எல்லாம் வளர்ச்சிக்கே...
அபார வளர்ச்சிக்கே...
எல்லாம் வளர்ச்சிக்கே...
அபார வளர்ச்சிக்கே...
எனக்கு எலும்பிச்சம் பழம் சொன்ன பாடத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.....
நன்றி....
நன்றி....
No comments:
Post a Comment