கண்ணுக்கு தெரியாத கடவுள் தன்னை கவணிக்க வேண்டும் என்பதற்க்காக எத்தனையோ பயிற்சி, முயற்சி செய்யும் மானிடா...
தன்னுடன் இருப்பர்களை கவனிிக்க எத்தனை முறை முயற்சி செய்திருக்கிறாய் என்பதை யோசித்து பார் முதலில்...
எல்லாம் கடவுள் கொடுத்தது என்று வாழ கற்றுக்கொள்ளுங்கள்...
உயிர் பிரியும் பொழுது எந்த பொருளின் மீதும் மோகம் ஏற்படாது..
உலகம் அனாதியானது அதில் அழகிய கட்டிடங்களை எழுப்புவது மனித ஆற்றல்...
விதி அனாதியானது அதில் அழகிய கர்மங்களை வகுத்துக் கொள்வதும் மனித முயற்சியே ஆகும்...
நமது கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள்.....நமது வாய் தவறினால் அடுத்தவர் மனம் உடையும் என பலர் யோசிப்பதில்லை...
இரவு படுக்கும் முன் நன்மையும்,தீமையையும் நியாய தராசில் எடைபோட்டு பாருங்கள்.
தீமை அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தால் அதை நாளை லாபமாக மாற்றிவிடுங்கள். நன்மை அதிகமாகி லாபமாக இருந்தால் அதை நாளை அனைவருக்கும் பங்கிட்டு கொடுங்கள்.
புண்ணியம் செய்திருங்க..?!...
இந்த பூமி..வீடு..வாசல்..சொத்து..இதெல்லாம் நீங்க செஞ்ச புண்ணியத்துனால வந்தது..
புண்ணியத்தோட கணக்கு இருக்கறவரைக்கும் உங்க உயிர் இதையெல்லாம் அனுபவிக்கும்.. அப்புறமா.. இந்த வீடு.. வாசல்.. சொத்து.. இதெல்லாம் இதே பூமியில அதே இடத்துல தான் இருக்கும்.. வேறொரு புண்ணியம் செஞ்ச ஆத்மா.. அதையெல்லாம் அனுபவிக்க அங்க வந்து பிறந்திரும்.. உங்க பிறவி முடிஞ்ச உடனே அதெல்லாம் மறந்திரும்... மறுபடியும் இந்த பிறவியில நீங்க செய்த பாவ, புண்ணியத்துக்கு தகுந்த மாதிரி வேற வீட்ல நீங்க ஜென்மம்
எடுக்க போயிருவீங்க. எல்லாமே கொஞ்ச காலம். எதுவுமே இந்த உலகத்துல நிரந்தரம் இல்லை.இதுதான் உலகத்தின் விதி...
மனம் செய்யும் தவறுகளுக்கு அறிவு போடும் தப்புத் தாளங்கள் அறிவை அறியா மனம் உயிரை பகடை காயாக்கி ஆசைபடுவதில் தவறில்லை. அம்மனதை அறியாது அதோடு இணைந்து அறிவு போடும் தப்புத் தாளத்தின் ஆட்டமே மீண்டும் அவ்வுயிர் பிறவித் தண்டனைக்கு காரணமாகிறது
இறை நினைவில் வாழும் தூய்மையான மனிதருக்கு, மன அமைதி நிறைந்த மனோ ரஞ்சிதமான உறக்கம் வரும்...
"எதார்த்தமான அன்பும் -எளிமையான வாழ்க்கை முறையும் -கருணையும் இருந்தால்-மனிதன் கடவுளை பிரதிபலிக்கலாம். "
No comments:
Post a Comment