Thursday, November 22, 2018

அத்திக்காய் ஊறுகாய்...

மூல நோயாளிகளுக்கு உகந்த அத்திக்காய் ஊறுகாய்

தேவையான பொருள்கள்:

அத்திக்காய் – ¼ கிலோ

காய்ந்த மிளகாய் – 50 கிராம்

மிளகு – 5 கிராம்

தனியா – 5 கிராம்

மஞ்சள் - 5 கிராம்

ஓமம் - 5 கிராம்

பெருங்காயம் - 5 கிராம்

கறிவேப்பிலை - 5 கிராம்

உப்பு – 20 கிராம்

செய்முறை:

அத்திக்காய் தவிர அனைத்துச் சரக்குகளையும் ஒன்றாக்கி, லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அத்திக்காயை காம்பு நீக்கி இரண்டாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்து வைத்துள்ள விழுதினையும் இத்தோடு சேர்த்து நன்ராகக் கலக்கி, பாத்திரத்தின் வாயில் துணியைக் கட்டி ஒருவாரம் வரை வெயிலில் வைத்தெடுத்து பின்னர் உபயோகிக்கவும்.

பயன்கள்:

இந்த ஊறுகாயை உண்டுவர.. நன்கு செரிமானம் உண்டாகும். பித்தம் தணியும். இதய நோயாளிகள் பிற ஊறுகாய்களுக்குப் பதிலாக இதனை உபயோகிக்கலாம். இந்த ஊறுகாய் மூல நோயாளிகளுக்கு உகந்தது.

No comments: