Monday, November 19, 2018

அழகு + அறிவு + ஆற்றல் = ஆண்கள்

யானைகளில் ஆண் யானைகளுக்கு மட்டுமே அழகான  வலிமையான நீண்ட தந்தம் இருக்கிறது.

சிங்கத்தில் ஆண் சிங்கமே அழகு.ஆண் சிங்கங்களுக்கு மட்டுமே அழகான கம்பீரமான பிடரி இருக்கின்றது.

மயில் இனங்களில் Iமே அழகான நீண்ட நெடிய தோகை உண்டு.அந்த தோகைதான் ஆண் மயிலுக்கு இராஜ தோரணை அளிக்கிறது.

ஆண் இனமான சேவலுக்கு மட்டுமே அழகான கொண்டை உண்டு.

மாடுகளில் கூட காளைகளே அழகும் கம்பீரமும் வாய்ந்தது.

மான் இனங்களில் கூட ஆண் மானுக்குத்தான் பெரும்பாலும் அழகான கொம்புகள் உண்டு.

இப்படி இன்னும் எந்த விலங்குகளை எடுத்துக் கொண்டாலும் விலங்கினங்களில் ஆணே அழகு.

தோட்டப் பறவை எனப்படும் பவர் பேர்டு  தன்னுடைய கூட்டை மிக அழகாக அலங்காரம் செய்யக்கூடியது. ஆண்தான் கூட்டைக் கட்டும். கண்கவர் பூக்கள், இறகுகள், அழகான கற்கள், உடைந்த பீங்கான்கள், பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யும்.

அலங்காரப் பொருள் அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருப்பது போலப் பார்த்துப் பார்த்து அழகாக அலங்கரிக்கும். இதற்காக நீண்ட தூரம் பறந்து சென்று  பல மணி நேரம் செலவிட்டுக் கூட்டை அலங்கரித்தவுடன், பெண் பறவையைக் கூட்டுக்கு அழைத்து வரும். அலங்காரத்தால் சந்தோஷமடையும் பெண் பறவை, ஆண் பறவையுடன் சேர்ந்து குடும்பம் நடத்தும்.

சிறந்த சமையல் கலைஞராக வர்ணிக்கப்படும் நளபாக சக்ரவர்த்தி ஒரு ஆண்.

இன்றும் கூட ஆண்கள் செய்யும் சமையலுக்கு தனி மணமும் அதீத சுவையும் உண்டு.

கடவுளர்களில் ஆண் தெய்வமான நடராஜரே ஆடலரசனாக அறியப்படுகிறார்.

ஒரு பெண் தன் குழந்தையை 10 மாதம் கருவில் சுமக்கிறாள்.ஆனால் ஆண் தன் வாழ்க்கை முழுவதும் பிள்ளைகளை  தோளிலும் நெஞ்சிலும் சுமக்கிறான்.

இந்த சமூகம்  பெண்ணை விட ஆணுக்கு அதிக பொறுப்புகளை கொடுத்திருக்கிறது.

ஒரு பெண் பிறரை சார்ந்து வாழ்வது  போல் ஒரு ஆணால் வாழ முடிவதில்லை.

வரலாற்று தோன்றிய காலத்தில் இருந்து ஆண் என்பவன் சமுதாயத்தின் காப்பாளனாக,சமூகத்தின் அடிப்படை தேவைகளை தன் உழைப்பால் பூர்த்தி செய்பவனாக அறியப்படுகிறான்.

ஆனால் ஆணின் இந்த முக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை.

இப்படி அழகு,அறிவு,ஆற்றல்,பொறுப்பு என எல்லாவற்றைலும் பெண்ணை விட ஆணே உயர்ந்து நிற்கிறான்.

ஆண் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்வோம்.இன்னொரு பிறவி இருந்தாலும் ஆணாகவே பிறக்க விரும்புகிறேன்.

பெண்மையை மதித்து  அங்கீகரிக்கும் ஆணே சிறந்த ஆணாக விளங்குகிறான்.

No comments: