Monday, December 10, 2018

பொண்டாட்டியும் வாட்ஸ்அப் குரூப்பும்...

'எங்கடி ஃபேஸ்புக்ல ஆளே காணோம்?'

'கொஞ்சம் பிஸி டி'

'வாட்ஸப்ல ஆன்லைன்லயே இருக்க, ஆனா இந்த பக்கம்ம ட்டும் வர்றதேயில்ல'

'ஹி ஹி கொஞ்சம் வாட்ஸப் க்ரூப்ல
பிஸியா இருக்கேன்டி'

'அதனால தான் நைட்ல கூட ஆன்லைனா',,??

'ஆமா'

'இப்ப எத்தனை க்ரூப்ல இருக்க?'

'பதினொன்னு'

'அடிப்பாவி போன மாசம் கேட்டப்ப கூட ஆறோ
ஏழோ க்ரூப்ஸ் தான் சொன்ன?'

'இப்ப புது க்ரூப்ஸ் நெறையடி'

'என்ன புது க்ரூப்ஸ்? '

'ஸ்கூல் க்ரூப் ஒண்ணு'

'ஆமா அதுல தான் நானும் இருக்கேனே'

'இல்லடி இது மூணாவது வரைக்கும்
வரைக்கும் ஒ்ண்ணாப் படிச்சவங்க'

'ம்ம் அப்புறம்?'

'ட்யூஷன் க்ரூப் ஒண்ணு'

'ஆமா நானும் இருக்கேனே அதுல'

'இல்லடி இது கெமிஸ்ட்ரி ட்யூஷன் க்ரூப், நீ
இருக்கறது ஃபிஸிக்ஸ் ட்யூஷன் க்ரூப்ல'

'ஓ இது வேறயா? அப்புறம்....'

குழந்தைகள் ஸ்கூல் மிஸ்லாம் இருக்காங்க இல்ல..
அவங்களோட ஒரு க்ரூப்..

தேவைதான்..அப்பறம்..?

எங்க ஃபேமிலி க்ரூப் நாலு...

என்னது...பேமிலி க்ரூப் நாலா..??
உங்க பேமிலியில மொத்தமே நாலு பேர் தானடி ..??

இல்ல...நாங்க ஓரகத்திங்க எல்லாம் ஒரு க்ரூப்...

வெளங்கும்....அப்பறம்.....??

எங்க வீட்டுக்காரரோட சித்தப்பா பெரியப்பா பசங்க எல்லாரும் சேர்ந்து ஒரு க்ரூப்..
எங்க பேமிலி பிரதர்ஸ் லாம் ஒரு க்ரூப்....

தெய்ய்ய்வமே.....

'நமக்கு தெரிஞ்ச க்ரூப் அட்மின்ஸ் எல்லாம்
இருக்காங்க தான ,
அவிங்க எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப்'

'எதுக்குடி வேலை வெட்டி இல்லாம?
சரி. விடு. வேற?'

'எங்க ஏரியா ஹவுஸ் மெய்ட்ஸ் எல்லாம் ஒரு க்ரூப்
வச்சிருக்காங்க'

'ஹவுஸ் மெயிட்ஸ் க்ரூப்ல உனக்கு என்னடி
வேலை?'

'இல்ல, நான் தான் அந்த க்ரூப் கோ- அட்மின்'

'அட கொடுமையே! சரி அப்ப கூட நீ சொன்ன
கணக்கு சரிவரலையே, இன்னும் ஒரு க்ரூப் இடிக்குதே'

'ம்ம்ம் ஆமா'

'என்னடி க்ரூப் அது?'

'நீ என்னை பத்தி ஏதாவது நெனச்சுக்குவே'

'க்கும்ம்ம் இதுக்கு மேலயுமா? சொல்லித் தொலை'

'அது போன ஜென்மத்துல ஒன்னா இருந்தவங்க
எல்லாரும் இப்ப சேர்ந்து ஒரு க்ரூப்
ஆரம்பிச்சிருக்கோம்...'
நட்புடன்! !!!!!!!
'😀😀😀😀

No comments: