Friday, December 28, 2018

சிந்தனைக்கு சில வரிகள்...

* உதவி சிலருக்கு தேவைப்படும் போது நாம நல்லவனுங்க... உதவி சிலருக்கு தேவைப்படாத போது நாம கெட்டவன்ங்க என்னப்பா இது உலகம்......

* பாதை மாறினால் பயணம் தொடராது. சொன்ன வார்த்தையை மீறினால் நட்பும், உறவும் தொடராது என்பதை உணர்ந்து நடந்தால் எல்லாம் தொடரும...

* ஒருவருடைய வார்த்தையில் இல்லாத கண்ணியம்.... நிச்சயமாக அவர், வாழ்க்கையிலும் இருக்காது...!

* கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். அதுபோல கெட்ட மனத்தைக் கொண்டவர்களிடம் அன்புக்கு மேல் அன்பைப் பொழியுங்கள். அவர்கள் மனமும் கரைந்து நல்வழிக்குத் திரும்பலாம்...

* "சிலரின் மகிழ்ச்சிக்காக, பல காலங்கள் தன்னை உருக்கி, ஆசையையும், ஆணவத்தையும்
தொலைப்பவன் ஆண்..."

* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்...

* எப்படா இவ பேசுவா என்பதற்கும், எப்படா இவ பேச்ச நிறுத்துவா, என்பதற்கும் இடைப்பட்ட காலம் தான் *"காதல்....*

* சொல் வேறு செயல் வேறு உள்ளவர்கள் நட்பு ஒருபோதும் நன்மை பயக்காது நிச்சயமாக தீமை பயக்கும்

* நீ எங்கே அசிங்கப் படுகிறாயோ, அந்த இடம் தான் #வாழ்க்கையின் பாடத்தை கற்றுக்கொள்ள சிறந்த இடம்... #அமைதியாக_இருந்து_ கற்றுக்கொள்..

* ஆண்களும் அழகான சிற்பங்கள் தான் ஆனால் சிற்பங்கள் அழகாய் இருப்பது செதுக்கும் பெண்கள் கையில் தான் உள்ளது.

* அன்பால் ஓர் ஆணை ஆளுங்கள். அதிகாரத்தால் ஆள நினைக்காதீர்கள்...  

* சில மனிதர்கள் நம் வாழ்வில் வரமாக வருவார்கள்... சில மனிதர்கள் நம் வாழ்வில் பாடமாகவே வருவார்கள்...!

*கலகம் வருவது ஏற்புடையதில்லைதான். அந்தக் கலகம் கற்றுக் கொடுக்கும் பாடம் இன்னொரு கலகம் மூளாமல் தடுத்து விடும். பிரச்சினைகளும் அப்படித்தான். புரிந்து கொண்டு செயல்பட்டால் பிரச்சினைகளை வளர்க்காமல் சமாளித்து விடலாம்.*

* வரலாறு நல்ல மனிதரின் வருகைக்காக காத்து இருப்பது இல்லை இருப்பவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து பயணித்து கொண்டு இருக்கிறது...

* சில நேரம் நம் கண்ணீரைத் துடைக்க யாரையோ நாடுகிறோம், நம்மிடம் விரல்கள் இருப்பதை மறந்து...!

*வாழ்க்கை ஒரு போராட்டம் என்கின்றனர் ஒரு சாரார், வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் என்கின்றனர் ஒரு சாரார். வாழ்க்கையை நிர்ணயம் செய்வது அவரவர் செயலைப் பொறுத்தே அமைகிறது.*

No comments: