Tuesday, January 22, 2019

பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்...

"Engineers can change world " என்று ஒரு வாசகம் உண்டு.
ஆம் டாக்டர்களால் உலகத்தை மாற்ற முடியாது. வக்கீல்களால் அது முடியாது.
பெரும் தொழில் அதிபர்களால் அது முடியாது.
ஆனால் பொறியாளர்களால் முடியும்.
இன்று நீங்கள் அனுபவிக்கும் அணைத்து வசதியும் பொறியாளர் செய்தது தான்.

நீங்கள் பயன்படுத்தும் ஒரு சாதாரண பேனா மேலே உள்ள பட்டனை ஒரு முறை அழுத்தினால் முனை வெளியே வருகிறது . அடுத்த முறை அழுத்தினால் உள்ளே போகிறது இது எப்படி என்று என்றைக்காவது யோசித்து இருக்கீங்களா ??
அதுவும் ஒரு பொறியியல் தான். ( 66 பேர் கொண்ட நிபுணர்களால் உண்டாக்க பட்ட தொழில் நுட்பம் அது )

இது போன்ற சிறிய பொருள் முதல் வானை முட்டும் கட்டிடம் வரை.. ராக்கெட் வரை... நாம் காணும் பாலங்கள் வரை சாலைமைப்புகள் இயந்திரங்கள், வாகனங்கள், வீட்டு பொருட்கள் மின் கருவிகள் , தொடங்கி உடுத்தும் ஆடைகள் வரை பொறியாளர்கள் வடிவமைத்தது தான்.
ஆம்...

"Engineers can change the world "

இந்தியாவில் பொறியாளர் தினமாக நாம் கொண்டாடுவது விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த நாளை தான் .
யார் இந்த விஸ்வேஸ்வரய்யா ?

இந்தியாவின் முன்னோடி பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா ஆங்கிலேய ஆட்சியில் பொதுப்பணித் துறையில் பணியாற்றியவர். 

மைசூரில் உள்ள கிருஷ்ணா ராஜா சாகர் அணை கட்டுமானத்தில் தலைமை பொறியாளராக இருந்தவர் இவர். ஹைதராபாத் நகரத்தையே வெள்ள அச்சுறுத்தலில் இருந்து காத்தவர் இவர் என்று சொல்லலாம்.
இவரது அர்ப்பணிப்பு மிகுந்த பணி யை பாராட்டி இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா வை கொடுத்து கவுரவித்தது அரசு.
மேலும் ஆங்கில அரசாலையே சர் பட்டம் கொடுக்க பட்டவர்.

அணைக்கட்டுத் தொழில்நுட்பத்தின் விற்பன்னரான இவர் தானியங்கி மதகு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர். இந்தத் தொழில்நுட்பம் முதன்முதலாக புனேயில் கடக்வசல அணைக்கட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு அணைக்கட்டுகளின் பின்னால் இவரது உழைப்பு உள்ளது.

அவரது பங்கைக் கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 இந்திய அரசால் பொறியாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
மேலும் google இவர் படத்தை டூடில் ஆக வைத்து கௌரவிக்கிறது.

உலகை ஆக்கபூர்வமான முறையில் மாற்ற இருக்கும் அனைத்து பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments: