Wednesday, January 16, 2019

நான் ஒரு விவசாயி...

விவசாயி ஆம்
நான் ஒரு விவசாயி...
விவசாயி என்றால் ஏழை
என்று பார்க்கும் என்  இனமே
நான் ஏழை அல்ல
நானே முதல் பணக்காரன்

ஏர் தொட்டு
கழனியில் நாற்று நட்டு
நீர் விட்டு நெல் மணியே
உனை பூக்க விட்டு
இந்த உலகத்துக்கே
சோறு போடும் விவசாயி
நான் ஏழை என்றால்
விந்தை தானே மக்களே!

சேற்றில் கால் பதிக்கும்
நான் கருப்புதான் ஏனெனில்
நான் புதைந்து நெல் மணியை
உங்களுக்கு வெண்மையாக தருவது
நான் அல்லவா உன்மைதானே!

விவசாயம் ஒரு அதிசயம்
செய்துபார் நீயும் ஓர் அதிசயமே
நான் மண்ணில்
புதைக்கப்பட்ட விதையல்ல-உன்னில்
புதைக்கப்பட்ட விதை நான்
நீ உயிர் வாழ நானே அதிசயம்!

நெல்மணி நானே பேசுகிறேன்
என்னை இட்டு
இனிப்பு தொட்டு
பொங்கலோ பொங்கல்
பொங்கிடவே உங்கள்
மனதில் மனநிறைவாய் நான்
இந்நாளில் பொங்கல் பண்டிகையாய்

நானே விவசாயி
நானே என்றும் உன் விசுவாசி
பொங்கலோ பொங்கல்
என்றும் நேசமுடன்.  *தமிழர் திருநாள்* *வாழ்த்துக்கள்*

No comments: