Wednesday, January 16, 2019

சுறா தூவி, மீன் பன்னா ஆகியவற்றின் பயன்கள்...

சுறா தூவி  ( shark fin )  மீன் பன்னா ( fish bladder, or  Swim bladder) என  கூறப்படும் மீனில் இருந்து எடுக்கபடும் பாகங்கள்  எதற்கு உபயோக படுத்த படுகிறது  மற்றும் கடல் குதிரை கடல் அட்டை போன்றவை பற்றி கடற்கரை மீனவர்கள் சிலர் மட்டும் அறிந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள   இதோ உங்களுக்காக

சுறா தூவி ( Shark Fin)

கடல் மீன்களில் எந்த நோயும் தாக்க முடியாத ஓர் மீன் உண்டு என்றால்  அது சுறா மட்டுமே  இந்த சுறாவில் மிக விலை உயர்ந்ததாக கருத படுவது அதன் தூவி என்ற மீன் கடலில் நீந்த பயன்படும் துடுப்பு போன்ற பகுதிதான்

இந்த தூவியை வெட்டி உலர்த்தி பதப்படுத்தி  விற்பனை செய்ய படுகிறது   ஒரு பத்து கிலோ எடை உள்ள சுறாவின் தூவி கிட்டதட்ட ரூ 3000 நமது ஊரில்  விற்பனை செய்யபடுகிறது. ஒரு சுறாவில்  ஐந்து தூவி பகுதிகிடைக்கும்

இவை பன்னாட்டு சந்தையில் கிலோ
$ 650 டாலர் வரை விலை உள்ளது நமது மதிப்பில் 45000 ரூபாய் 

இவை சுறா வகைக்கு ஏற்றார் போல்  விலை உள்ளது.

உதாரணமாக

ஒரு திமிங்கல சுறாவின் தூவி   பன்னாட்டு சந்தை விலை கிட்டதட்ட  1400000 ரூபாய்

Basking Shark  என்ற சுறாவின் தூவி  முப்பது லட்சம் வரை விலை உள்ளது  இவ்வளவு விலை கொடுத்து இந்த தூவியை வாங்கி அப்படி என்ன செய்கிறார்கள்

இந்த தூவி சூப் செய்யவே பயன்படுகிறது  ஆம்  இந்த சூப்  சீன தேசத்தின்  மிக கௌரவம் மிக்க  ஆடம்பரமான உணவு வகை  இவை அங்கே  மிக ஆடம்பரமான திருமணங்களிலும்  ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் பரிமாறப்படுகிறது  ஒரு கப் சூப் நமது பணத்திற்கு 7000 முதல்  விற்பனை செய்யபடுகிறது

இந்த சூப்பில் அப்படி  என்ன விசேஷம் 

இது ஆண்மையை  அதிகரிக்கும் என சீனர்களால் நம்பப்படுகிறது 

மீன் பன்னா ( Fish bladder-Swim bladder )

பன்னா  என்றால் தெப்பம் என பொருள் படும் ஒரு மீனின் பாகம் 

இந்த பன்னா சில மீன்களில் மட்டும் பெரியதாக கானப்படும் அவற்றில் சில

1) கூறல்
2) விலாங்கு மீன்
3) பன்னா மீன்

இந்த பன்னா  பிரத்யேகமான மீன்களுக்கு  உள்ள பாகம் அந்த மீனை  கடலில்  தேவையான ஆழத்தில் நிலைநிறுத்திக் கொள்ள  தெப்பமாக பயன் படுத்துவதால் தான் பரதகுலம் இதற்கு பன்னா என பெயரிட்டு அழைக்கிறது.  இந்த மீனின் உத்தியைத்தான்  கடற்படை நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்துகிறது

இந்த மீன் பன்னா எதற்கு பயன் படுகிறது

இந்தபன்னாவும் சூப் செய்யத்தான் பயன் படுகிறது

இந்த சூப்பில் என்ன விசேஷம்

இந்த சூப் குழந்தை இன்மையை நீக்கும் என்றும் மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாகவும்  பயன்படுத்துகிறார்கள்  சீனர்கள் இந்த சூப் பெயர் fish maws

ஒரு குவளை சூப் 1000 ரூபாயில் இருந்து 5000 வரை

கடல் அட்டை ( Sea cucumber)

இது இந்தியாவில் 2001 ல் இருந்து தடை செய்யப்பட்டு உள்ளது

பதபடுத்தபட்ட கடல் அட்டை  சூப்பாக சீனர்கள் பயன்படுத்துகிறார்கள்  இதன் மருத்துவ குனம் உடல்  சோர்வு, இயலாமை, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் மூட்டு வலி இந்த வகை நோய்களுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கடல் அட்டையில் நிறைய  ரகங்கள் உள்ளன  ரகத்திற்கு ஏற்றார் போல  விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ராஜ கடல் அட்டை விலை அதிகம்

கடல் குதிரை ( seahorse)

இது இந்தியாவில்  தடை செய்யப்பட்டு உள்ளது

இவையும் சூப் ஆகவே பயன் படுத்துகின்றனர் சீனர்கள்

கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ளும் உயிரினம்

இவையும் ஆண்மையை விருத்தியாக்கும் என நம்ப படுகிறது

மிக முக்கியமான விசயம் இந்த பொருட்களை  மீனவர்கள் யாரும் சாப்பிட்டு இருக்க வாய்ப்பில்லை ஏன் என்றால் நாம் சீனர்கள்  நம்பிக்கையை நம்புவது இல்லை...

No comments: