இது பெண்களை பொருட்களாக பார்க்கும் ஆண்களுக்கு மட்டும்...
முதுகில் காயம்பட்டால் இழுக்கு என்று மார்பில் காயம்பட்டு துணிச்சலுடன் இறந்த மனிதர்கள் வாழ்ந்த இந்த நாட்டில்...
இன்று நம்பிக்கை எனும் ஆயுதத்தை கையில் கொண்டு பழகும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க போகிறார்கள்...
நண்பன் என்று நம்பிய ஜோதி சிங்க் இன்று நம்மிடையே இல்லை. அண்ணன் என்று நம்பிய ஹாசினி இன்று சாம்பலாக மாறிவிட்டால்...
நண்பன் என்று நம்பி வந்தேன் என்ற நூற்றுக்கணக்கான சகோதிரிகளின் கதறல் சத்தம்...
இன்னும் எத்தனை காலம் பெண்களை துரத்தி கொண்டு இருப்பீர்கள்?
இன்று போர்க்களத்தில் இருக்கும் தன் மகன் பத்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் தாய்மார்களை விட பள்ளிக்கு சென்ற தன் மகள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று எண்ணும் தாய்மார்கள் அதிகமாகி விட்டார்கள்...
ஒழுக்கம் சொல்லி தரும் ஆசான் இன்று ஒழுக்க சீர்குலைப்புக்கு காரணமாகி விடுகிறான்!
பெண்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்திருந்தால் இந்த சமூகம் இப்படி இருக்காது என்று சொல்லும் ஆண்கள்... ஆறுமாத குழந்தையின் உடையில் என்ன மாற்றம் செய்ய முடியும்?
பெண்களுக்கு ஆண்நண்பர்கள் தேவையா என்று முழங்கும் ஆண்கள் மத்தியில் தன் தோழிக்காக, சகோதரிக்காக உயிரை கொடுக்கத் துணியும் ஆண்களும் இந்த சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் மாதர் சங்கங்களே! அந்த பெண்களின் அழுகுரல்கள் உங்களுக்கு கேட்கவில்லையா?
தண்டனை வேண்டும்... அந்த தண்டனை இன்னோருவன் அந்த தவறை செய்யாமல் இருக்க பயத்தை உண்டு பண்ண வேண்டும்.
ஆடுகளாக இருந்தால் ஆயனாக இருக்கலாம்... குள்ளநரிகளாக இருப்பதினால் வேட்டையாடத்தான் வேண்டும்...
No comments:
Post a Comment