ஆன்மீக சிந்தனை...
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள்!
நேரடியாக, கண்களால் ஒரு பக்கத்தை மட்டுமே காணமுடியும்!
ஒரு பக்கத்தைக் காணும்போது, மறுபக்கத்தை காண வாய்ப்பே இல்லை!
மறுபக்கத்தைக் காண, திருப்பிப் பார்க்கும்போது, ஏற்கனவே தெரிந்துகொண்டிருந்த பக்கம் மறைந்துபோகும்.
அதுபோல்,
மனிதனாக நம்மை உணரும் வரை, நமது மறுபக்கமாகிய ஆன்மா உணரப்பட முடியாதது!
ஆன்மாவை உணரும்போது, இந்த மனித நிலையை நம்மால் உணரவே முடியாது.
ஏக காட்சிக்கு ஒன்றுமட்டுமே சொந்தம்!
மறுபக்கம் எப்போதும் உத்தேச கதியில் இருக்கும்...
சிந்தனை துளிகள்
*இந்தப்பக்கம் காட்சியில் இருக்கும்போது மறுபக்கத்தை சிறந்ததாகவும், அதுவே அடையத்தகுந்தது என்றும் கருதுவது கூடாது*
உறவுகள் உரசிக்கொண்டிருக்கும் தீக்குச்சியை போல எப்போது யார் குடும்பத்தை பிரிப்பார்கள் என யாருக்கும் தெரியாது
முயற்சி தான் வெற்றியின் முதற்படி என்றால் அந்த முதற்படி அடைய நீ முன்னூறு முறை தோற்றாலும் முயற்சியை இழக்காதே
பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள்......ஒன்றிருக்கும் இடத்தில் மற்றென்று இருப்பதில்லை.....
ஒரு பேப்பர் ரெண்டு நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆகும் ஒரு கட்டை எரிஞ்சா பத்து நிமிஷம் சாம்பல் ஆகும் ஒரு மரம் எரிஞ்சா ரெண்டு மனி நேரம் சாம்பல் ஆகும் ஒரு மனிதன் ஆறு மனி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆவான் இவ்வளவு தான் வாழ்க்கை.....!
வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு வெற்றி வந்த பிறகு குதிரையை விட வேகமாக ஓடு ! அப்பொழுது தான் உன் வெற்றி உன்னிடம் நிலைத்திருக்கும் !
தொடங்கும் முன் தயங்காதே.! தொடங்கிய பின் நடுங்காதே.!     இடையில் உறங்காதே.!
வேதனை கண்டு பதுங்காதே.! சோதனை வரும் துவளாதே.! சாதனை செய்வாய் கலங்காதே.!
ஒரு நாள் நிச்சயம் விடியும்.     அது உன்னால் மட்டுமே முடியும்.!
அந்த விடியல் நாளைய தினமாக கூட இருக்கலாம்.!
No comments:
Post a Comment