அடுத்தவன் சொல்கிறான் ......
உன் தலைமுடி ஏன் இவ்வளவு வெள்ளையாக இருக்கிறது! டை அடித்து கொள்!
நீ ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறாய், நன்றாக சாப்பிடு!
நீ ஏன் இப்படி உடை உடுத்தி கொள்கிறாய், நன்றாக அழகாக உடை உடுத்தி கொள்!
நீ ஏன் இப்படி நடந்து கொள்கிறாய், அப்படி நடந்து கொள்!
இதுதான் உலகம்!
"வெளியே பார்த்து ஒவ்வொன்றும் தான் நினைப்பது போல இருக்க மற்றவரை மாற்ற ஆசைப்படுகிறோம்""
இதுதானே வினை!
அவனை பார்!
இவனை பார்!
இப்படி இருக்கிறான்!
அப்படி இருக்கிறான்!
எப்போதும்
ஒரே சலசலப்பு தான்!!
இதுவா அழகு!!
அவனுக்கு அழகே தெரியவில்லை!
ஏனென்றால்
அவன் ஒருபோதும் தனக்குள்ளே பார்ப்பதே இல்லை
அப்படி அவன் பார்த்திருந்தால்...
தன் அலங்கோலம் புரிந்திருக்கும்,  தலைகுனிந்திருப்பான்!!
அந்தளவிற்கு மோசமாக அவனது மனம் இருக்கும்!!
நீ உள்ளே பார், வேறு எதுவுமே தேவையில்லை, சும்மா பார்! என்னதான் உள்ளே இருக்கிறது, என்று உன் அகப்பெட்டியை திறந்து பார்
அசந்து போவாய்!
உன்னை அலங்கோலமாக ஆக்குவதல்ல ஆன்மீகம்... உன்னை அற்புதத்தின் ஆனந்தமாக ஆக்குவதே ஆன்மீகம்!!
No comments:
Post a Comment