நீங்கள் குப்பையென ஒதுக்கும் இந்த சொடக்கு தக்காளியின் பயன்கள்...
இதுவரை நீங்கள் இதை சாப்பிடாமல் இருந்திருக்கலாம் ஒருவேளை இனிமேல் உங்கள் கண்களில் இனிமேல் இது பட்டால் உடனடியாக சாப்பிட முயற்சி செய்யுங்கள். தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த தக்காளி பல ஊட்டச்சத்துக்களை கொண்டது, மேலும் இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கடும்.
நீங்கள் குப்பையென நினைக்கும் இந்த அற்புத மூலிகையின் பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கண் ஆரோக்கியம்
இந்த சொடக்கு தக்காளியில் ஏராளமான வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளது. கண்களின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க கரோட்டினாய்டுகள் அவசியம். கேரட்டை போலவே இதுவும் கண் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் முக்கியமான பொருளாகும். குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்த சொடக்கு தக்காளி அவர்களின் கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
மரபணு பழுதுகள்
இந்த சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மிக அதிக அளவில் உள்ளதென அறிவியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. இதன் அற்புதமான பயன்களில் ஒன்று உங்கள் டி.என்.ஏ வில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்துவதாகும். ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு இன்றே சொடக்கு தக்காளியை சாப்பிட தொடங்குங்கள்.
சர்க்கரை நோய்
அறிவியல் ஆய்வுகளின் படி இந்த தக்காளியில் சோடியம் மற்றும் கொழுப்புகள் இல்லை. மேலும் இதில் குறைந்தளவே க்ளெசமிக் குறியீடுகள் உள்ளது. எனவே இது சர்க்கரை நோய் உள்ளவர்களும், சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment