சரியான ஆவணம் இருந்தால், கல்விக்கடன் நிச்சயம் If you have the right document, you will definitely be educated 'வங்கிக்கு சென்றாலே கடன் கிடைக்காது என்ற எண்ணத்தை முதலில் விடுங்கள்.
சரியான ஆவணங்கள் இல்லாமல் சென்று வந்தவர்கள் சொல்வதை நம்பி, உங்களுக்கு கடன் கிடைக்காது என நினைக்க வேண்டாம்&'&' என்று ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வணங்காமுடி பேசினார்.ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் வணங்காமுடி பேசியதாவது:
படிக்கவிருக்கும் படிப்புக்கான பணத்தேவை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்; திட்டமிடுங்கள். எந்த படிப்புக்கு, எவ்வளவு செலவு என்பதை முழுமையாக அறிந்து பின், படிக்க வையுங்கள்.பணத்தின் மீதான மதிப்பை மகன்/மகளுக்கு கற்றுக்கொடுங்கள். அப்போது தான் அவர்களுக்கு பெற்றோர் கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள் என்ற சுமை தெரியும்.வங்கிக்கு சென்றாலே கடன் கிடைக்காது என்ற எண்ணத்தை முதலில் விடுங்கள். சரியான ஆவணங்கள் இல்லாமல் சென்று வந்தவர்கள் சொல்வதை நம்பி, உங்களுக்கு கடன் கிடைக்காது என நினைக்க வேண்டாம்.
ஆவணம் சரியாக இருந்தால் நிச்சயம் கடன் கிடைக்கும்.எஸ்.சி., - எஸ்.டி., முதல் பட்டதாரி, சிறுபான்மையினர் கல்விக்கடனில் உள்ள சலுகைகளை அறிந்து கொள்ளுங்கள்.அனைத்து வங்கியும், அனைத்து படிப்புக்கும் கல்வி கடன் வழங்க தகுதியானவை. இந்திய குடிமகன் அனைவரும் கடன் பெற முடியும்.அதற்கு பெற்றோர், மாணவர் இணைந்த &'ஜாயின்ட் அக்கவுன்ட்&' முதலில் துவங்க வேண்டும். நேரடியாக வங்கியை நாடுவதை விட, இணையதளம் மூலம் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் வழிகளும் எளிது.
&'vidyalakshmi.co.in &' என்ற இணையதளத்தில் உங்களது விவரங்களை பதிவு செய்து, வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கிளையில், கடன் மறுக்கப்பட்டாலும், தலைமை அலுவலகங்கள் உங்களது விண்ணப்பத்தை ஏற்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment