வாழ்க்கையை ஆக்கும் சிற்பி : எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி,
எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்...
தீய எண்ணம் : உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்,
அது உள்ளத்திலெழும் ஒழுங்கற்ற எண்ணமே...
பெரியோர் இயல்பு : உணவில் எளிமை, உழைப்பில் கடுமை,
ஒழுக்கத்தில் உயர்வு, உத்தமர் இயல்பு...
பெரியார் : அறிவு, சுகம், பொருள், அரசியல், விஞ்ஞானம்
ஐந்து தத்துவங்கள் அறிந்தவன் பெரியோன்...
அறிவின் அளவு : அண்டமனைத்தும் ஓர் அடியால் அளக்கலாம்
அணுவுக்குள் அடக்கலாம், அவ்வறிவின் அளவையறி...
எண்ணமும் செய்கையும் : எண்ணு, சொல்,செய்
எல்லோர்க்கும் நன்மை தர, எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு...
எண்ணத்தின் வலிமை : எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்,
எண்ணத்தில், உறுதியும், ஒழுங்கும் அமைந்திடில்...
உண்மை இன்பம் : பொங்குக பொங்குக பூரித்து உள்ளமெலாம்
எங்கும் நிறைந்தநம் ஏகாந்த நிலையறிந்து...
தியாகியும் ஞானியும் : கடமையுணர்ந்து அதைச் செயலில்
காட்டுபவன் தியாகியாம், கடவுளே மனிதனான கருத்தறிந்தோன் ஞானியாம்...
கடவுளும் கடமையும் : கடமையில் உயர்ந்தவர் கடவுளை நாடுவார்
கடவுளை அறிந்தவர் கடமையில் வாழுவார்...
கவலைக்கு மருந்து : இயற்கையை அறிந்து ஒத்து எண்ணுபவர் எண்ணம்
எப்போதும் எவ்விடத்தும் கவலையாய் மாறாது...
உனது பெருமை : அவனில் அணு, அணுவில் அவன்,
உன்னில் எல்லாம், நீ அறி உன்னை...
பெண்ணின் பெருமை : பெண் வயிற்றி லுருவாகிப் பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்... பெண்ணின் பெருமை உணர்...
எண்ணம் பிறக்குமிடம் : எண்ணத்தின் சக்தி இயல்பு அறிந்திடில்,
எண்ணம் பிறக்கும் இடமும் விளங்கும்...
மூவாசை அளவறிந்தால் கேடில்லை : மண்மீது பெண் துணையால்
பொன் கொண்டே வாழ்கின்றோம் மாற்றுவதேன் மூவாசை...
மதியுடனே பயன் கொள்வோம்...
No comments:
Post a Comment