தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள்
ஆராய்ச்சி மையங்கள்–1
1. சென்னை பல்கலைக்கழகம்:- –
இதுவே தமிழ்நாட்டின் பழம்பெரும் பல்கலைக்கழகம் இது 1857ல் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக நெடுங்காலமாக இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகியவற்றுக்கு, தனி பல்கலைக்கழகங்கள் வந்துவிட்டதால், இந்த 3 துறைகளும் அந்தந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விட்டன. சென்னையை இருப்பிடமாகக் கொண்டுள்ளது.
2. அண்ணா பல்கலைக்கழகம்:- –
தமிழ்நாட்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் பல்கலைக்கழகம் இதுதான். 1978ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்டது. கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இது செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலத்தில் உள்ள சுமார் 375 அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.
3. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்:- –
தமிழ்நாடு முழுவதும். இது 1971ம் ஆண்டு ஜூன் 1 எம். கே. வி. கோயம்புத்தூரில் உருவாக்கப்பட்டது. 1990ம் ஆண்டு இது தமிழ்நாடு ஜி. டி. நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 1992 ஆண்டு மறுபடியும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் என்று பழையபடி மாற்றம் செய்யப்பட்டது.
4. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்:- –
சென்னை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க மையம் ஒன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1966ம் ஆண்டு தெ. போ. மீனாட்சி சுந்தரனாரை முதல் துணை வேந்தராகக் கொண்டு மதுரை பல்கலைக்கழகமாக உருவானது. 1976ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டது
5. தமிழ் பல்கலைக்கழகம்:- –
1981ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தஞ்சாவூரில் உருவாக்கப்பட்டது. தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது. 972.70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
6. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்:- –
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழக மாற்றியது. காந்தியடிகளின் புதிய கல்வி சிந்தனையான ‘நய்தலீம்’ என்பதன் அடிப்படையில் அமைந்துள்ள இந்த பல்கலைகழகம் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிராம வளர்ச்சி கிராம சமுதாய அறிவியல், அயல்நாட்டு, மொழிகள் தமிழ் இந்திய மொழிகள் கிராம சுகாதாரம் நலவாழ்வு கிராமியக்கலைகள் போன்ற துறைகளில் உள்ளது.
7. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்:- –
தொடக்கத்தில் கொடைக்கானலில் உருவாக்கப்பட்டு 1990ல் சென்னைக்கு மாற்றப்பட்டு 1994ல் மீண்டும் கொடைக்கானல் சென்றது. பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி, நிராதரவான மற்றும் கிராம பெண்களின் நலன் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக் கொண்ட இப்பல்கலைக்கழகத்தின் மையங்கள் கொடைக்கானல், மதுரை, நாகர்கோவிலில் உள்ளன.
8. அழகப்பா பல்கலைக்கழகம்:- –
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் டாக்டர் அழகப்ப செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.
9. பாரதிதாசன் பல்கலைக்கழகம்: –
சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலை உருவாக்கப்பட்டது.
10. வேலூர் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம்:- –
வேலூர் பொறியியல் கல்லூரி தான் மத்திய அரசால் தன்னாட்சி பெற்று வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்றாயிற்று.
11. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்:- –
இந்தப் பல்கலைக்கழகம் சென்னையில் உள்ளது. தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி இவையே இப் பல்கலைகழகத்தின் அடிப்படையாகும்.
12. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்:- –
இது சென்னையில் அமைந்துள்ளது. சென்னை மதுரை பாரதியார் காமராஜர் பாரதிதாசன் பல்கலைக் கழகங்களின் கீழ் இருந்த அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பார்மசி கல்லூரிகளும் இதன் கீழ் இணைந்துள்ளது.
No comments:
Post a Comment