Friday, June 28, 2019

உடல் சூட்டினால் இத்தனை பிரச்சனையா?

உடல் சூடு என்பது இன்று பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். வாத உடம்பு உள்ளவர்களை இந்த பிரச்சனை அதிகமாக தாக்கக்கூடியதாகும். இதனை ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நமது உடலை பல்வேறு நோய்கள் தாக்கிவிடும். இதில் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தால், வாய்ப்புண், நாக்குப்புண், வயிற்றில் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்...’ என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. 'தலைவலி வரும்... ஜலதோஷம் பிடிக்கும்... முகத்தில் எண்ணெய் வடியும்... தலைமுடியை அலசுவதே கஷ்டம்...'' என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.

'தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை 'தின ஒழுக்கம்’ என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.

இந்த உடல் சூட்டை போக்க சித்த மருத்துவத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளன. உங்களது உடலுக்கு ஏற்ப மருத்துவ முறையை நீங்கள் பயன்படுத்தி பலன் பெறலாம்.

அவற்றில் ஒன்று எண்ணெய் குளியல்
( oil bath)

பெருந்தித்தி இலை, பழம்பாசி, மலை வேம்பு, கடுக்காய், கருவேப்பிலை, கைகாப்பு, உளுந்து, டீ மர ஆயில்,

மூலம் தயார் செய்த ஆயிலை( சிவப்பு நறம்) வாரம் இரு முறை ( புதன், சனி) குளித்து வர,
உடலில் உள்ள உஷ்ணம் வெளியேறுவதை உணர்ந்து பார்க்க முடியும்,

அது மட்டுமின்றி,

            உடல் சோர்வை நீக்குகிறது,

            வியற்வைதுளைகளின் வழியே         உள்‌சென்று தோல் சம்பந்தப்பட்ட நோயைப் போக்குகிறது,

            தசை பிடிப்பு,தசை வலி, வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள் ஆயில் மசாஜ் செய்து ஓரளவு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.

No comments: