ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது. அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர்.
அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள். ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.
அந்த தீவில் வெறும் புற்களும், புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..!
அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர்.
அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான். ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான்.
பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான். ஆச்சர்யமாக அவன் வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான். தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.
முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின. ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான்.
ஆனால், புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர். இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.....
இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான். அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது.
முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயுத்தமானான். இது ஏதும் அறியாத அந்த இன்னுமொருவன் இன்னும் பசியாறாமல் வேதனையில் வாடினான்..?
எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான்,தன் நண்பன் ஒன்றுக்கும் உதவாதவன். கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்க வில்லை. ஒரு சிறு பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்க வில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதானல், அவனை அழைத்து செல்ல இவனுக்கு இஷ்டமில்லை என்றான் சுயநலம் பிடித்த அந்த நண்பன்..!!
படிக்கும் நமெக்கெல்லாம் கடவுள் மேல் கோபம் வருகிறது அல்லவா...!! அப்போது அந்த படகு கிளம்பத் தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது...!
ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..? என்று அந்த குரல் கேட்டது...!
அதற்கு அந்த மனிதன் சொன்னான் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார். என் நண்பனின் பிரார்த்தனை ஒன்றுக்கும் கூட கடவுள் செவி சாய்க்கவில்லை. அவன் ஒன்று கூட பெற தகுதி இல்லாதவன் என்று சொன்னான்.
அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்...!!உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஒன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தேன். அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்து இருக்காது.
அந்த மனிதன் என்ன கேட்டான் பிரார்த்தனையில்? அவனுக்கு நான் ஏதாவது கடமை பட்டு இருக்கிறேனா என்றான்..?
அந்த குரல் மேலும்,
உன் நண்பன் பிரார்த்தனையில் என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன்,வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன். ஆகவே, என் பிரார்த்தனையெல்லாம் அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள்... அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல....
ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்று தான் வேண்டினான்.
அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்..!!
கதையின் நீதி:
நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே நமக்கு எல்லாம் கிடைத்து விடுவதில்லை. அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைத்து விட வேண்டாம், சந்தேகப்பட வேண்டாம். உறவையும் நட்பையும் மதிக்க கற்று கொள்ளுங்கள்!!
No comments:
Post a Comment