உலக காற்று தினம்!
உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம்.
மூச்சு விடுவதில் துவங்கி குளுகுளு வசதியை பெறும் ஏ.சி வரை பல வகைகளில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது காற்று.
உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு மிகவும் முக்கியம்.
உணவை உற்பத்தி செய்யும் தாவரங்கள், அதனை உற்பத்தி செய்ய கார்பன் டை ஆக்ஸைடு என்ற கரிய மில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
அதே வேளையில் உயிரினங்கள், பிராணவாயுவை உட்கொண்டு, கரியமில வாயுவை வெளியிடுகின்றன. உயிரினங்களின் இன்றியமையா தேவையான காற்று, இன்று பல வழிகளிலும் மாசு அடைந்திருக்கிறது.
காற்றின் தேவையை அறிந்து கொள்ளவும், அதனை மாசு இல்லாமல் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக காற்று தினமாக ஜூன் 15 கொண்டாடப்படுகிறது.
நம் பூமியையும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் காக்க, நம் அடுத்த தலைமுறை சுத்தமான காற்றை சுவாசிக்க இன்றே உறுதி ஏற்போம்.
உலக மூத்தோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினம்
உலகளவில் 60 வயதைக் கடந்த முதியோர்களின் எண்ணிக்கை 1995ஆம் ஆண்டில் 542 மில்லியனாக இருந்தது.
இது 2025இல் 1.2 பில்லியனாக அதாவது இரு மடங்காக உயரப்போகிறது.
சுமார் 4 முதல் 6 சதவீதம் முதியோர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.
இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். முதியவர்களை மரியாதையுடன் நடத்த ஐ.நா. இத்தினத்தை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment