Tuesday, August 13, 2019

தியானம்...

தியானம் என்பது ஏதோ மனம்
சம்பந்தப் பட்டது அல்ல ...

அது உங்கள் உள்ளொளியோடு
சம்பந்தப் பட்டிருக்கிறது ...

உங்களுடைய மனதைப் பார்த்துக்
கொண்டேயிருங்கள் ...

மனம் செய்வதையெல்லாம்
கவனியுங்கள் ...

நீங்கள் பார்வையாளராக மட்டும்
இருங்கள் ...

கவனித்துக் கொண்டிருத்தலின்
அதிசியம்தான் தியானம் ...

நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும்
போதே ...

எண்ணங்கள் அற்ற வெற்றிடமாக
மனம் மாறுகிறது ...

மனம் வெற்றிடமாக மாறும்போது
உங்களுடைய ஒட்டு மொத்த ...

சக்தியும் விழிப்புணர்வின் ஜ்வாலையாக
மாறுகிறது ...

இந்த ஜ்வாலைதான் தியானத்தின்
பலனாகிறது ...

கவனித்துப் பார்த்துக் கொண்டிருப்பதால்
மனம் மறைந்து விடுகிறது ...

எண்ணங்கள் மறைந்து
விடுகின்றன ...

நீங்கள் முழு விழிப்புணர்வு நிலைக்கு
வந்து விடுகிறீர்கள் ...

அப்போது உங்களிடம் ஒரு சிறிது
எண்ணம் கூட இல்லாமல் ...

உங்களுடைய அந்தராத்மா நிசப்தமான
வானம் போல் இருக்கும் ...

அந்தத் தருணம்தான் தெய்வீகம்
பொங்கும் தருணம் ...

இந்தத் தருணத்தில் தான் சக்தி உள்முகமாக
திரும்புகிறது ...

உள்முகமாக திரும்பும் சக்தி
அளவற்ற மகிழ்ச்சியையும் ...

பேரானந்தத்தையும்
தருகிறது .

தியானம் - ஒரு   சின்னக்கதை

ஒரு  நாட்டின்   அரசன் நிறைய  குதிரைகளை வைத்திருந்தான்.
அதில்  ஒரு குதிரை  மட்டும். யாருக்கும்  அடங்காமல் . கட்டுப்பாடு  இல்லாமல்  இருந்தது ..
.
இந்த  குதிரையை  அடக்குபவர்களுக்கு   பெரிய பரிசு தருவதாக  அறிவித்தார்...
பலரால் அடக்க  முடியாத.குதிரையை  அடக்க   ஒருவர்  வந்தார்..

பல வாரங்கள்  சென்றது  ..ஒரு நாள்  குதிரையை.அடக்கி விட்டதாக   அவர்  அரசரிடம்    .சொன்னார் ...

நீ எப்படி   இந்தக் குதிரையை அடக்கினாய்  என அரசர்  கேட்க

அவர்.. இந்தக் குதிரையை  நான்  அடக்க வில்லை. ... அதுவே அடங்கி  விட்டது   என்றார்.

நான்  இந்தக் குதிரையில்  ஏறியதும்  . அது பயங்கரமாக ஓட  ஆரம்பித்தது .நானும்  அதை அடக்காமல்  அதன் ஓட்டத்துக்கு  ஏற்று  அனுசரித்து  .அதில்  சவாரி  செய்து  வந்தேன். ... நாளடைவில்  அக்குதிரை தானாகவே முரட்டுத் தனமாக ஓடுவதை விட்டு  விட்டது. .......
.... ..... ....அதோ.போல்   நம். மனதை  .அடக்க  .அடக்க   மனம்  இன்னும்  .அதிவேகமாகவே  ஓட ஆரம்பிக்கும்.....
.....................எனவே.. மனதை அடக்க.  முயற்சி   செய்ய  வேண்டாம். .

.மனதை   ஓடவிட்டு. . அது  ..எங்கே. . ஓடுகிறது. . எங்கே  நிற்கிறது. .  கவனியுங்கள். .

No comments: