Sunday, September 1, 2019

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள்...

Watch video

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் பற்றி பார்ப்போம். இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் நன்மைகளும் இருக்கிறது தீமைகளும் இருக்கிறது...

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் கிடைக்கும் நன்மையை விட தீமைகள் மிகவும் மோசமாக இருக்கிறது.

நம் ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவத்தில் எப்படியாவது ஒரு நாளாவது இரவு முழுவதும் விழித்திருக்கும் அனுபவம் கிடைத்திருக்கும்.

சில பேருக்கு தேர்வு நாட்களில் விழித்திருந்து படித்த அனுபவம் கிடைத்திருக்கும் சிலருக்கு வாழ்க்கை முழுவதுமே இரவு விழித்திருக்கும் சூழ்நிலையில் இருப்பார்கள்.

எது சிறந்தது? இரவு முழுவதும் விழித்திருந்து ஒரு மணித்துளி கூட வீணாக செலவு செய்யாமல் இருப்பதா அல்லது காலையில் எழுந்து ஒரு மணித்துளி கூட வீணாக செலவு செய்யாமல் இருப்பதா எது சிறந்தது வாருங்கள் பார்ப்போம்.

சில பேரால் காலையில் வேலை செய்வதைவிட மாலையில் அதிக ஊக்கத்துடன் வேலை செய்ய முடியும் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.

இரவில் அதிக நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள் அதிக அறிவாளியாக இருக்கிறார்கள் மேலும் அதிகமான வேலையும் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி சொல்கிறது.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் செய்யும் செயல்களில் இடம், பொருள், ஏவல் உணர்ந்து வளைந்து கொடுக்கக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அதிகமான எண்ணிக்கையில் நண்பர்களோடும் உறவினர்களோடும் வாழும் இடத்தில் கவனச் சிதைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களால் இரவு நேரத்தில் அமைதியாக இருந்து அந்த நேரத்தை தங்களது செயல்களை செய்ய பயன்படுத்த முடியும்.

இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நிறையவே உள்ளதாக ஆராய்ச்சி சொல்கிறது மேலும் தங்களது உணர்ச்சிகளை அடக்க கூடியவர்களாகவும் அதனை வெளிப்படுத்த தயங்குபவர்களாக இருப்பதாகவும் ஆராய்ச்சி சொல்கிறது.

எனவே இவர்களிடத்தில் மன அழுத்தம் பதட்டம் போன்றவை ஏற்படுவதற்கு  அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி சொல்கிறது.

சரியான தூக்கம் இல்லாத காரணத்தினால் இவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, நோய் எதிர்ப்பு சக்திகுறைவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பதனால் பகல்வேளையில் செய்யும் செயல்களில் விரைவாக சோர்வு அசதி போன்றவை ஏற்படும்.

இவர்களுக்கு இரவு நேரத்தில் குறைவான நேர இடைவெளியில் அதிகம் சாப்பிடக் கூடிய மன நிலை ஏற்பட்டால் உடல் பெருக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே ஃபிரண்ட்ஸ் இரவு நேரம் விழித்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள் தற்காலிகமாக இருக்கிறது ஆனால் இரவு விழித்து இருப்பதனால் கிடைக்கும் தீமைகள் நோய்கள் நிரந்தரமாக அல்லது வாழ்க்கை முழுவதும் இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

No comments: