Thursday, September 12, 2019

பிரிட்ஜில் வைக்கக் கூடாத காய்கறிகள்...

ஹாய் பிரண்ட்ஸ் Trends in Tamilnadu சேனலை சப்ஸ்கிரைப் பண்ண நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க நான் மகான் அல்ல நல்ல மருத்துவ குறிப்பு மற்றும் நல்ல தகவல்கள் வெளியிடப்படும்.

Click here to watch the video

நம்மள்ள நிறைய பேரு நெனச்சுக்கிட்டு இருக்கோம் பிரிட்ஜ்ல வைக்கிற ஒரு உணவுப் பொருள் பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று ஆனால் உண்மை அதுவல்ல. பிரிட்ஜ்ல வைக்கவே கூடாத மாறாக சாதாரனமாக சமையலறையில் வைக்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களும் இருக்கு. அதுல நாம அன்றாடம் பயன்படுத்துற ஒரு ஏழு  முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம் வாங்க...

அதுக்கு முன்னாடி இந்த சரக்கு அறை மற்றும் சமையலறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்...

சரக்கு அறையானது வெளிச்சம் புகாத இருட்டு அறை ஆக இருக்க வேண்டும் ஏனென்றால் வெளிச்சம் புகக் கூடிய இடமாக இருந்தால் உணவுப் பொருட்கள் முளைவிட ஆரம்பித்துவிடும். ஆனால் சமையலறை வெளிச்சம் போகக்கூடிய நன்கு காற்றோட்டம் இருக்கக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.

முதலாவதாக உருளைக்கிழங்கு
உருளைக் கிழங்கை ஒருபோதும் பிரிட்ஜில் வைக்காதீங்க ஏன்னா உருளைகிழங்க ஃப்ரிட்ஜில வைத்ததும் அதுல இருக்குற ஸ்டார்ச் தன்மை மாறி சுகர் தன்மை அதிகரித்து விடும் எனவே உருளைக்கிழங்கை சாதாரண ஒரு பேக்கில் வைத்து வெளிச்சம் புகாத அறையில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக வெங்காயம் வெங்காயத்தை பிரிட்ஜில வைக்காதீங்க ஏனென்றால் அதனுடைய தோல் பகுதி மென்மையாகி நீர்த்துவிடும் எனவே அதனை வெளிச்சம் புகாத அறையில் வைக்கவேண்டும். அதனை வெளிச்சம் புகக்கூடிய இடத்தில் வைத்தால் முளைவிட ஆரம்பித்துவிடும்.

மூன்றாவதாக தக்காளி
தக்காளியை பிரிட்ஜில் வைக்கும் பொழுது ஃப்ரிட்ஜ் ஆனது தக்காளியில் உள்ள சவ்வு தன்மையை மாற்றி அதனுடைய சுவையை கெடுத்து விடும் எனவே அதனை வெளியே ஒரு பாத்திரத்தில் வைக்கும் பொழுது அது மேலும் கனியாகி நல்ல சுவை தரக்கூடிய உணவாக மாறும்.

நான்காவதாக வெள்ளைப்பூடு
வெள்ளைப் பூண்டானது பிரிட்ஜில் வைக்கப்பட்டால் அதனுடைய இயற்கையான கடினத்தன்மையை இழந்து ரப்பர் போன்று மாறிவிடும். இந்த ரப்பர் போன்ற வெள்ளைப் பூண்டானது நமது உடலுக்கு எந்த பலனையும் தராது.

ஐந்தாவதாக பிரெட்
பிரெட் ஆனது பிரிட்ஜில் வைக்கப்படும் பொழுது அதனுடைய மென்மைத் தன்மையை இழந்து கடினத் தன்மையை பெற்றுவிடும். எனவே இதனை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. மாறாக காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆறாவதாக தேன்
தேனானது பிரிட்ஜில் வைக்கப்படும் பொழுது அதனுடைய திரவ நிலையை கடந்து கடினத்தன்மையை பெற்றுவிடும் எனவே அதனை சாதாரண அறையில் அதனுடைய மூடி நன்றாக பூட்டப்பட்டு காற்று புகாதவாறு வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.

ஏழாவதாக வாழைப்பழம்
வாழைப்பழமானது ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டால் அது கனியும் தன்மையை இழந்து ஜவ்வு தன்மையை அடைந்து கருத்துவிடும் ஆனால் நன்கு கனிந்த வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம்.

எனவே பிரண்ட்ஸ் இந்த மருத்துவ குறிப்பு உங்களுக்கு கண்டிப்பாக பிடித்திருக்கும்னு நினைக்கிறேன் இந்த வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ரொம்ப பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க... Thank You Very Much

No comments: