Monday, September 2, 2019

வள்ளலார் அருளிய காயகல்பம் தயாரிக்கும் முறை...

மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம்

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும்.

சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.

ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினை அருளியுள்ளார்.

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம்,

தூதுவளை 50 கிராம்,

முசுமுசுக்கை 50 கிராம்,

சீரகம் 50 கிராம்

ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.

இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும்.

சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய மலங்கள் வெளித்தள்ளப்படும்.

சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய்மைப் படுத்தப்பட்டு சாப்பிடும் அனைத்தும் முழுமையாக இரத்தத்தில் சேர்க்கப்படும்.

99 சதவீதம் பெரும் நோய்கள் உடலை தாக்காமல் இருக்கும்.

கேன்சர், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள் வராது.

உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகும்.

வள்ளலார் அருளிய எளிய முறை காயகற்ப சூரணம் இது.

இதற்கு பத்தியம் எதுவுமில்லை.

இந்த காயகற்ப சூரணம் சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது.

காலையில் அருந்துவதற்கு ஏற்ற மூலிகைபானமாகவும் விளங்குகிறது.

இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.

இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.

No comments: