Tuesday, September 3, 2019

என்னவிதமான புரிதல் இது???

நான் பிறரிடத்தில

சாக்ரடீஸைப் படியுங்கள் என்ற போது  நீங்கள் கிரேக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

கார்ல் மார்க்ஸை படியுங்கள் என்ற போது  நீங்கள் யூதனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள் என்ற போது  நீங்கள் ஜெர்மானியனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

வ்ளாடிமிர் லெனினை படியுங்கள் என்ற போது நீங்கள் ரஷ்யனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

எர்னஸ்டோ சே குவேராவைப் படியுங்கள் என்ற போது நீங்கள் அர்ஜென்ட்டினியனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஜான் லாக்கை படியுங்கள் என்ற போது  நீங்கள் சுதந்திரவாதியா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஃபிடல் காஸ்ட்ரோவை படியுங்கள் என்ற போது நீங்கள் கியூபனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

நெல்சன் மண்டேலாவைப் படியுங்கள் என்ற போது நீங்கள் தென்ஆப்பிரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஆபிரகாம் லிங்கனை படியுங்கள் என்ற போது நீங்கள் அமெரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

மார்ட்டின் லூதர் கிங்கைப் படியுங்கள் என்ற போது நீங்கள் நீக்ரோவா என்று கேள்வி எழுப்பவில்லை.!

சார்லஸ் டி கோளலை படியுங்கள் என்ற போது நீங்கள் பிரெஞ்சுக்காரனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

வில்லியம் வாலஸை படியுங்கள் என்ற போது நீங்கள் ஸ்காடிஷ்ஸா என்று கேள்வி எழுப்பவில்லை.!

மாவோசேதுங்கை படியுங்கள் என்ற போது நீங்கள் சீனனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஆனால்,,,

தன் வாழ்நாளில் 46 லட்சம் புத்தகங்களை வாசித்த, உலகின் மிகப் பெரிய வடிவிலான அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த,
15000 பக்கங்களை எழுதி 55க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிட்ட,
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பகுத்தறிவு பொதுவுடைமையை போதித்த,
காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிற்காகப் போராடிய,
சாதிமத ஆதிக்க ஒடுக்குமுறையை எதிர்த்து இந்தியாவில் போராடிய,
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் "
"பாரத ரத்னா" “பாபாசாஹேப்
டாக்டர் அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt)” அவர்களைப் படியுங்கள் என்றால் மட்டும்,

“ஏன் நீங்கள் தலித்தா” என்ற மூர்க்கத்தனமான கேள்வி எழுகிறது.!?

என்னவிதமான புரிதல் இது...???
கேடுகெட்ட சமூகத்தில் வாழ்கின்றோம்.

பகிர்வு

No comments: