Saturday, December 14, 2019

சளி,இருமலுக்கு இதமாக இருக்கும் மஞ்சள் மிளகு பால்...

குளிர்காலத்தில் நிறைய மக்கள் சளி, இருமலால் மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள், மஞ்சள் மிளகு பாலைத் தயாரித்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். சிலர் இதெல்லாம் ஓர் ரெசிபியா என்று கேட்கலாம்.

ஆனால் உண்மையில் பலருக்கு மஞ்சள் மிளகு பாலை சரியான முறையில் செய்யத் தெரியாது. அத்தகையவர்களுக்காகத் தான் மஞ்சள் மிளகு பாலின் செய்முறையை தெளிவாக கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து குடித்து சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.

தேவையானபொருட்கள்:

பால் - 1 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

பனங்கற்கண்டு - 1 டேபிள் ஸ்பூன்

#செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். 

பால் நன்கு கொதித்ததும், அதில் பனங்கற்கண்டு சேர்த்து கரைய விட வேண்டும்.

பனங்கற்கண்டு கரைந்த பின், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 

பின்பு அதில் மிளகுத் தூளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், மஞ்சள் மிளகு பால் ரெடி!!!🙏 *ஆ.கிங்மெச்சோடா*

No comments: