Monday, December 2, 2019

நீர் எப்படி உருவாகிறது?

நீர் எப்படி உருவாகிறது?

‘நீர் எங்கு உற்பத்தியாகிறது’ என்று கேட்டால் உத்தேசமாக விடை சொல்லி விடலாம். பனி படர்ந்த மலைகளில் இருக்கும் பனிப் பாறைகள் உருகி வற்றாத ஜீவ நதியாக உருவெடுக்கிறது என்று சொல்லாம். நீர் எங்கு உற்பத்தியாகிறது என்பதல்ல இங்கு கேள்வி! நீர் எப்படி உருவாகிறது?

இதற்கு அறிவியல்ரீதியாக பதில் வேண்டும். இந்தக் கேள்வியும் எளிதானதுதான். இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும், ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறும் இணைந்து நீர் உருவாகிறது. விடை இவ்வளவுதான். விளக்கம்தான் மிகப் பெரியது.

ஆக்ஸிஜனுக்கும், ஹைட்ரஜனுக்கும் இடையே நடைபெறும் வேதி வினையால்தான் நீர் உருவாகிறது. சொல்லப் போனால் வேதி வினையால் ஏற்படும் மாற்றங்கள்தான் உலகின் பெரும்பான்மை இயக்கத்திற்குக் காரணம்.

ஆனால் இந்த வேதி வினைகள் உடனடியாக நடந்து விடுவதில்லை. ஆக்ஸிஜனும், ைஹட்ரஜனும் சேர்ந்த மறு விநாடியே அது நீராக மாறிவிடும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். வேதிவினைகள் அவ்வளவு விரைவாக நடைபெற்றால் அது உலகத்திற்கு பெரிய ஆபத்தையே விளைவிக்கும்.

இப்படி நினைத்துப் பாருங்கள். இரும்புக் கதவின் மீது தண்ணீரை ஊற்றிய உடனே அந்த இரும்புக் கதவு துருப்பிடித்துவிடும் என்றால் என்ன ஆகும்? மரத்துண்டுகள் மேல் மழைநீர் விழுந்த உடனேயே அம்மரத்தில் பூஞ்சைகள் பூத்துவிடும் என்றால் என்ன ஆகும்? நாம் பார்த்து ரசிக்கிற உலகம், ரசிக்கிற மாதிரி இருக்காது.

வேதிவினைகள் விரைவாக நிகழ்ந்துவிடும் என்றால் கண் மூடித் திறப்பதற்குள் உலகத்தின் படைப்புகள் அனைத்தும் அழிந்துவிடும். வானமும், கடலும் வற்றி விடும். உலகின் மேற்பரப்பில் உலோகங்களும் இருக்காது; அலோகங்களும் இருக்காது.

உயிர்ப் பொருள்களை மண் சிதைத்து விடும்; தரையில் படுத்துத் தூங்கி எழுகிற நேரத்துக்குள் மனிதனை உயிரோடு மட்கச் செய்துவிடும். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா? வேதி வினைகள் விரைவுபடுத்தப்பட்டால் இது மாதிரியான வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுவிடும்.

ஆனாலும் வேதி வினைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இரும்பு துரு பிடிக்கிறது. கந்தகமும், ஆக்சிஜனும் சேர்ந்து கந்தக டை ஆக்சைடு உருவாகிறது. ஹைட்ரஜனும் குளோரினும் சேர்ந்து ஹைட்ரோ குளோரிக் அமிலம் உருவாகிறது.

இதுபோன்ற வேதிவினைகள் இயற்கையாக துரிதப்பட்டுவிட்டால் அப்புறம் இயற்கை இயற்கை எய்தி விடும். இந்த வேதிவினைகளை விரைவாக நடக்கவிடாமல் எது தடுக்கிறது? அப்படி தடுக்கும் மந்திர சக்தி எது? அந்த மந்திரசக்தி என்பது வேறொன்றுமில்லை. தனிமங்களின் வினைபடுதிறன்.

ஒரு தனிமத்தின் மூலக்கூறுகள், அவற்றின் வினைபடு திறனுக்கு ஏற்ப இன்னொரு தனிமத்துடன் சேர்ந்து சேர்மங்களாக உருவாகின்றன. எந்த ஒரு தனிமத்தின் மூலக்கூறும் புல்லட் ரயில் வேகத்தில் இயங்காது (வேதித் தொழிற்சாலைகளில், செயற்கையாகச் செய்யப்படும் வினைகள் நொடிப் பொழுதில் நிகழ்த்தப்படுகின்றன. அவை விதிவிலக்குகள்!)

அப்படியென்றால், ைஹட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்து நீர் உருவாவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்? ஒரு கண்ணாடிக் குடுவையில் ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் சேர்த்து அடைத்து ஆயுட்காலம் முழுவதும் காத்திருந்தால்கூட அந்த கண்ணாடிக் குடுவையில் உள்ள ஆக்சிஜனும் ைஹட்ரஜனும் சேர்ந்து நீராக மாறிவிடாது.

அவ்வளவு ஏன்? ஒரு நீர்த்துளி உருவாவதற்கான அறிகுறியாக ஒரு நீர்த்திவலையைக் கூட நீங்கள் பார்க்க முடியாது. நூறாண்டுகள் ஆனாலும் இதுதான் கதி. வினை நடக்குமா நடக்காதா என்று சந்தேகம் கூடத் தோன்றலாம். வினை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இரண்டு தனிமங்களும் இணைந்து நீர் உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

ஓர் அவசரக் குடுக்கையாக, அந்தக் குடுவையை நீங்கள் 500 டிகிரி செல்சியசுக்கு மேல் சூடுபடுத்தினால் வினை வேகமாக நிகழ்ந்து நீர்த் திவலைகள் உருவாகும். ஆனால் 500 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குடுவை ெவடித்துவிடுமே! எனவே இயற்கையை விட்டால் வாய்ப்பே இல்லை.ஏன் நீர் உருவாக இவ்வளவு தாமதமாகிறது? ஒரு சின்ன விளக்கம்.

நீர் உருவாக வேண்டும் என்றால் ைஹட்ரஜன் மூலக்கூறுகளும், ஆக்சிஜனுன் மூலக்கூறுகளும் பல கோடி முறை மோதிக் ெகாள்ள வேண்டும். பல கோடி மோதல்களில் ஒரு சில மோதல்கள்தான் நீர் மூலக்கூறை உருவாக்குகின்றன.

இவ்வாறு மூலக்கூறு மோதல் நிகழ ேவண்டுமானால், தனிமத்தின் அணு மூலக்கூறுகள் பலமிழந்து, தனிமத்தின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேற வேண்டும். வெப்பம் போன்ற இயற்கை சக்திகளால்தான் ஒரு தனிமத்தின் மூலக்கூறு கட்டமைப்பை உடைக்க முடியும்.

இன்னொரு கண்டிஷனும் உண்டு. இந்த இரண்டு தனிமங்களின் மூலக்கூறுகளும் இணைந்து புதிய நீர் மூலக்கூறு உருவாவதை வேறு எந்த சக்தியாலும் தடுக்க இயலாத சூழல் உருவாக வேண்டும். அப்போதுதான் நீர் உருவாகும். செயற்கையாக வேண்டுமானால் ஆய்வகத்தில் சிறிது நீரை உடனே உருவாக்கிவிடலாம். இயற்கையாக உருவாக இலட்சம் ஆண்டுகள் பிடிக்கும். நமக்கு தண்ணீரைச் சேமிக்கும் பழக்கம் இனியாவது வரவேண்டும்.

No comments: