Tuesday, January 7, 2020

மனிதன் அறியாத சில விஷயங்கள்...

மனிதன் அறியாத சில விஷயங்கள்.

Click below to watch the video 👇🏽👇🏽👇🏽


மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால் கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.

ஒரு கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம். ஒரு மிதிவண்டி இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது. சிக்கலுக்கு பயந்தால் வாழ்க்கை நிறையாது.

ஒருபோதும் உங்களை நியாயப்படுத்திக் கொள்ள பிறரை காயப்படுத்தி விடாதீர்கள்.

உயரப் போகும் போது உதவும் உறவை விட விழும்போது தாங்கும் உறவே மேலானது.

ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம் போன்றது எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடலாம்.

பொறுமை ஒருபொழுதும் தோற்பதில்லை. பொறாமை ஒருபொழுதும் ஜெயிப்பதில்லை.

பென்சிலுக்கு பின்னாலிருக்கும் பரம்பரை போல எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அதிலே உண்டு. அதை விட்டு வேறு எங்கும் தேட வேண்டாம்.

மக்கள் ஸ்மார்ட்போன் வாங்கும் அளவுக்கு பணக்காரனாகவும் கீரை வியாபாரியிடம் பேரம் பேசும் அளவுக்கு ஏழையாகவும் இருக்கிறார்கள்.

பெற்ற உதவிக்கு நன்றி மறக்காதே செய்த உதவிக்கு நன்றி எதிர்பார்க்காதே.

கோபத்தை உப்பு போல பயன்படுத்த வேண்டும். குறைந்தால் மரியாதை போய்விடும். கூட்டினால் மதிப்பு போய்விடும்.

ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை அல்ல. ஆஸ்பத்திரி போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை.

Click below to watch the video 👇🏽👇🏽👇🏽



Type your comments and Share With your friends...

No comments: