Sunday, March 15, 2020

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டியவை சாப்பிடக்கூடாதவை...

தெரு கடைகளில் விற்கும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் அவை சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டு இருக்காது.

கேரட், வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளை பச்சையாக சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. அவற்றை தவிர்க்க வேண்டும். இந்த நாட்களில் கட்டாயமாக எல்லா காய்கறிகளையும் அவிச்ச பின்பே சாப்பிட வேண்டும்.

சமைக்கப்பட்ட உணவை மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நன்றாக வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் சூப் வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

பல நாட்களாக வெட்டி வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் கடைகளில் பழச்சாறு குடிப்பதையும் இந்த நாட்களில் தவிர்க்கவும்.

வைட்டமின் சி அதிகமாக தரக்கூடிய ஆரஞ்சு பழம் எலுமிச்சை பழம் எடுத்துக்கொள்வது நல்லது.

உடல் நீரேற்றம் அடைந்ததாக இருக்க வேண்டும். குளிர் காலத்தில் தண்ணீர் தவிக்காது இருந்தாலும் 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது முக்கியமாகும். பழச்சாறுகள் மூலமாகவும் நீரேற்றம் அடைந்து கொள்ளலாம்.

அசைவ உணவுகள் உட்கொள்வதில் கவனம் அதிகம் தேவை. வாங்க படுகின்ற இறைச்சி சுத்தமானதாகவும் புதிதானதாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கி உண்ணவும்.

புளிப்பான உணவுகள் உண்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புளிப்பான உணவுகள் மேல் இந்த நாட்களில் ஆர்வமிருக்கும் இருந்தாலும் அவற்றை மிகவும் கவனத்துடன் உண்ண வேண்டும்.

இந்த நாட்களில் சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்றவற்றிற்கு மூலிகையிலான கை மருந்துகளை எடுத்துக்கொள்வது  மிகவும் நல்லது.

இந்த நாட்களில் வறுத்த பொரித்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் அவை செரிமான கோளாறை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு நாளுக்கும் தேவையான vitamin A, C, E, zinc, selenium, B6, B12, மற்றும் folic acid கிடைக்கக் கூடிய உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.

சரியான மருத்துவரை அணுகி எந்தெந்த உணவு வகைகளை உட்கொள்வது  என்பதை குறித்த அறிவுரையை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.

No comments: