Sunday, March 15, 2020

குரோட்டன்ஸ் செடிகளை தெரிந்து கொள்வோம்...

கிட்டத்தட்ட நூறுக்கும் அதிகமான வகைகளைக் கொண்டது இந்த குரோட்டன்ஸ் செடிகள்.

ஒரே செடியிலேயே பல வண்ணங்கள் இருப்பதால், இவை பார்க்கும் கண்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறது.

இந்தக் குரோட்டன்ஸ் செடிகளை பார்த்து தியானம் செய்யும்பொழுது மன அமைதி கிடைக்கும்.

இவை சூரிய வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்திலும் குறைவாக உள்ள இடத்திலும் வளரக்கூடியவை.

இவைகள் அழகிற்காக மட்டுமில்லாமல் மருத்துவ குணங்களும் கொண்டதாக இருக்கிறது.


மற்ற எல்லா செடிகளையும் விட   croton tiglium அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது.

ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு குரோட்டன்ஸ் இலையைக் கொண்டு குணமாக்கலாம் என்று தகவல்கள் சொல்கிறது.

காய்ச்சல், சளி, தடுமல், வயிற்றுப்போக்கு மற்றும் பல் வலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக croton tiglium இருக்கிறது.

குரோட்டன்ஸ் செடிகளை பராமரிப்பது மிக மிக எளிதான ஒரு காரியம். எனவே அதிக அளவில் வீடுகளில் வளர்க்கலாம்.

குரோட்டன்ஸை வீட்டிற்குள் வளர்ப்பதால் வீடு முழுவதும் பிராணவாயு நிறைந்திருக்கும் ஆதலால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வீட்டிற்கு வெளியே வளர்ப்பதால்  வீட்டிற்குள் குளிர்ந்த காற்று கிடைக்கும். வீட்டிற்கு அழகிய தோற்றம் கிடைக்கும்

எனவே பிரண்ட்ஸ் இன்னைக்கு ஒரு செடி உங்க வீட்ல வாங்கி வைக்க முடியுமான்னு பாருங்க...

No comments: