Sunday, March 15, 2020

உடல் எடை குறைய இதை செய்து பாருங்க...

காலை உணவு 

ஒரு கப் பால், இரண்டு அவிச்ச முட்டை, 4 ஸ்லைஸ் ப்ரவுன் பிரட் சாப்பிடவும். இது அதிக புரதச்சத்து நிறைந்த உணவாக இருக்கும்.

மதிய உணவு
ஒரு கப் சோறு காய்கறி நிறைந்த சாம்பார் அவிச்ச சிக்கன் அல்லது அவிச்ச மீன் சாப்பிடலாம்.

இரவு உணவு 
வாரத்தில் ஒருமுறை தவிர்த்தல் நல்லது அல்லது 2 ஸ்லைஸ் பிரெட், ஒரு கப் வெஜிடபிள் சூப் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி 
காலை அல்லது மாலை கட்டாயமாக ஒரு மணி நேரம் நடத்தல் மற்றும்  ஓடுதல் போன்ற உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

க்ரீன் டீ
உடற்பயிற்சிக்கு முன்பும் உடற்பயிற்சிக்கு பின்பும் ஒரு கப் க்ரீன் டீ குடிப்பது மிக அவசியம்.

நெய்  
சோறோடு நெய் சேர்த்து சாப்பிடுதல் தோலுக்கு ஆரோக்கியத்தையும் உடல் எடையையும் குறைக்கும்.

ஊக்கமூட்டுதல் 
வாரத்திற்கு ஒரு முறை போட்டோ எடுத்து வைத்து மனம் கலக்கம்  அடையும் பொழுது பழைய போட்டோவையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தல் ஊக்கமளிக்கும்.

சந்தோஷம் 

வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் விரும்பிய உணவை திருப்தியாக சாப்பிட்டு சந்தோசம் அடையலாம்.

21 நாட்கள் தொடர்ந்து செய்வதன் மூலமாக நீங்கள் மிகப்பெரிய வெற்றியை அடையலாம் மேலும் இது உங்களது பழக்கமாக மாறும்.

No comments: