Sunday, March 15, 2020

ஒருங்கிணைந்த முழுமையான மூளை செயல்பாடு (Brain Gym)

ஹாய் பிரண்ட்ஸ் ஒருங்கிணைந்த முழுமையான மூளை செயல்பாட்டை அடைவது பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க... 

மனிதனின் மூளையானது   வலது மூளை மற்றும் இடது மூளை என்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து செயல்படுகிறது.

இதில் வலது மூளையானது உடலின் இடது பகுதிகளின் செயல்பாடுகளை இயக்குவதாக இருக்கிறது மேலும் இடது மூளையானது உடலின் வலது பகுதிகளின் செயல்பாடுகளை இயக்குவதாக இருக்கிறது.

பொதுவாக கணிதம் சார்ந்த கருத்துக்கள், அறிவியல் சார்ந்த கருத்துக்கள் அல்லது  ஏதேனும் ஒரு கருத்தை குறித்து சிந்தித்து பகுப்பாயும் நேரம், மேலும் ஒரு கருத்தை குறித்து எழுதும்போது அல்லது அதனைக் குறித்து பேசும் பொழுது நாம் நமது இடது மூளையை அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.

பொதுவாக தத்துவம் ஆன்மிகம் படைப்பாற்றல் கலை மற்றும் இசை போன்றவற்றை சிந்திக்கும் பொழுது அதிக அளவில் வலது மூளையை பயன்படுத்துகிறோம்.

பொதுவாக மனிதர்கள் இந்த இரண்டு வகையில் ஏதேனும் ஒரு வகையில் அதிகமாக ஆர்வம் செலுத்துவார்கள் அப்படி இருக்கும் பொழுது இந்த இரண்டு மூளையும் ஒருங்கிணைந்து செயல்படாது ஏதேனும் ஒரு மூளைதான் அதிக பயன்பாட்டில் இருக்கும். அதனால்  இந்த இரண்டு மூளையும் சம அளவில் பயன்படுத்தப்படுவது கிடையாது. 

பொதுவாக மனிதர்கள் சமநிலையற்ற மூளை பயன்பாட்டினை கொண்டிருப்பதால் அவர்கள் துயரம் கஷ்டம் இடுக்கண் வரும்பொழுது பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்த இரண்டு பிரிவுகளும் சம அளவில் பயன்படுத்தப்படும் பொழுது அதனால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள் அதிகம். அதைத் தான் ஒருங்கிணைந்த மூளை செயல்பாடு என்று அழைக்கிறோம்.

ஒருங்கிணைந்த மூளை செயல்பாட்டினை கொண்டவர்கள் அறிவாற்றல் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். இன்பம் துன்பம் போன்றவற்றை ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்பம் துன்பம், கஷ்டம், துயரம், இடுக்கண் எதுவும் இவர்களது சந்தோசத்தை கூட்டவோ குறைக்கவோ முடியாது. இவர்களை ஆன்மீக ரீதியில் ஞானம் அடைந்தவர்கள் என்று கூறுகிறோம்.

இந்த  ஒருங்கிணைந்த மூளை செயல்பாட்டினை பெறுவது எப்படி?

மிகவும் அருமையான ஒரு முறை தியானம் செய்வதாகும்

தியானம் செய்வதன் மூலமாக மூளையானது அதிக வளம் பெறுகிறது.  நேர்மறை எண்ணங்கள் அதிக அளவில்  உடலிலும் மனதிலும் எண்ணத்திலும் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக ஆழமான உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் வலிமை பெறுவது போல் ஆழமான தியானம் செய்வதால் மூளை வலிமை பெற்று இரண்டு மூளைக்கும் இடையே அருமையான ஒரு தொடர்பு ஏற்பட்டு ஒருங்கிணைந்த மூளை செயல்பாட்டினை பெறலாம்.

சமநிலையான மூளை செயல்பாட்டை பெரும் பொழுது உடலின் நரம்பு மண்டலம் முழுவதும் புது மாற்றம் பெற்று ஒரு உன்னத நிலையை அடையும்.

மற்றொரு முறையாக நாம் வலது கை பழக்கம் உடையவராக இருந்தால் இடது கையையும் அல்லது இடது கை பழக்கம் உடையவராக இருந்தால் வலது கையையும் மாற்றி சில வேலைகள் செய்யும்பொழுது    நம்மால் நாம் அதிகம் பயன்படுத்தாத  மூளையை தூண்ட முடியும். இந்தப் பயிற்சியைத் தான் பிரைன் ஜிம் என்று அழைக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியில் மிகவும் எளிமையான கண்டிப்பாக உங்களால் செய்யக்கூடிய ஒரு பயிற்சி என்னவென்றால் காலையில் பல் துலக்கும் போது உங்களது மாற்று கையை பயன்படுத்தி பல் துலக்கி பாருங்கள் உங்களது மாற்று மூளை தூண்டப்பட்டு உங்களது எண்ணத்திலும் மனதிலும் புது மாற்றத்தை உணர்வீர்கள் இது போன்று படிப்படியாக மேலும் சில முயற்சிகளை செய்யும்பொழுது ஒருங்கிணைந்த மூளை செயல்பாட்டினை பெறலாம்.


No comments: