Friday, April 17, 2020

இயற்கை வளம் பேணுவோம்...

ஆள் வைத்‌து அழுக்கை அள்ளியும் சுத்தமாகாத #கங்கை மனிதன் நடமாற்றமின்றி சில நாட்களிலேயே #தூய்மையானது...

காட்டிற்குள் சிறைப்பட்டிருந்த வன #விலங்குகள் மனிதன் வீட்டிற்குள் சிறைப்பட்டதும் #சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன...

#ஓசோனில் ஓட்டை விழும் அளவிற்கு கரியமில வாயுவினால் சிதைந்திருந்த புவியின் வாயு மண்டல #மாசின் அளவு கணிசமாக #குறைந்துள்ளது...

இவையனைத்தும் இயற்கைக்கு எதிரான #மனிதனின் செயல்களையும்...

மனிதன் இல்லாமலிருந்தால் #பூமியானது எப்படி அனைத்து உயிர்களுக்குமான #ஆரோக்கியமான இடமாக இருக்கும் என்பதற்கான சான்றுகள்...

உயிரியல் #பரிணாம_வளர்ச்சியின் உயர்ந்த உயிரினமாக இருக்கும் #மனிதனுக்கு_மட்டுமானதல்ல இப்புவி...

அனைத்து உயிரினங்களுக்குமானதாகையால்....
 #இயற்கையை_அழித்துவிடாமல் அதை அப்படியே...

அடுத்த #தலைமுறையினருக்கு கொடுக்க வேண்டியது ஒவ்வொரு #மனிதனின்_கடமை...

இயற்கையை சேதப்படுத்தும் நம் ஒவ்வொரு செயலும் நமது அடுத்த தலைமுறைக்கு செய்யும் #துரோகம் மட்டுமன்று...

மற்ற #உயிரினங்களுக்கும்_பூமிக்கும் செய்யும் துரோகம் ஆகும்...

இயற்கைக்கு எதிராக மனிதனின் ஆட்டம் #தாண்டவமாடும் போது..

இயற்கை #கோர_தாண்டவம் ஆடி தன்னை சரிசெய்து கொள்ளும் என்பது கடந்த கால #வரலாறாதலின்..

இயற்கை அன்னையை காத்து நம்மை நாமே #தற்காத்துக் கொண்டு பிற உயிரினங்களையும் இயற்கையின் கோர தாண்டவத்திலிருந்து #காப்போம்..

#இயற்கை_வளம்_பேணுவோம்...

No comments: