Thursday, May 7, 2020

சேப்பங்கிழங்கின் மருத்துவ குணங்கள்...

சேப்பங்கிழங்கு ஒரு கிழங்கு வகையை சேர்ந்தது. லேசான இனிப்பு சுவை இந்த கிழங்கில் இருப்பது சற்று அலாதியான விஷயம். இதனுடைய அறிவியல் பெயர் colocasia esculenta. 
 
தென் கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணை கண்டத்தில் உள்ள நீர்த்தேக்கம் அதிகம் உள்ள இடங்களில் விளையக்கூடியது. சேப்பங்கிழங்கு கேரள மாநிலம் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் அதிகம் இருப்பதை காண முடியும்.

சேப்பங்கிழங்கு அரிப்பு உள்ளதால் பச்சையாக இல்லாமல் நன்கு காயவைத்து அல்லது சில நாட்கள் கழித்து பயன்படுத்துவதால் அரிப்பை தவிர்க்கலாம். இதில் சராசரியாக 85% மாவுச்சத்து உள்ளது. சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப் பூச்சித் தொல்லையை போக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கும் ரத்த அழுத்த கோளாறுகளுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.

 பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட கூடியது.

100 கிராம் சேப்பங்கிழங்கில் 130 கிலோ கலோரிகள் 100 கிராம் இருக்கிறது. மேலும் விட்டமின் "C" மற்றும் "B" காம்ப்ளக்ஸ் அதிகம் உள்ளது. 
பொதுவாக 2 வயது குழந்தைகளுக்கு மேல் அனைவரும் சாப்பிடலாம். 

சேப்பங்கிழங்கு இலைகளும் மருத்துவ குணம் அதிகம். வடமாநிலங்கள் மற்றும் கேரளாவில் தேங்காய்ப்பாலில் சேப்பங்கிழங்கு இலையை சேர்த்து வேகவைத்து சூப்பாக பருகுவார்கள். உத்தரகாண்ட் போன்ற வடமாநிலங்களில் இலையை பக்கோடா செய்தும் சாப்பிடுவர்.  நீரிழிவு நோய்களுக்கு இது சிறந்த மருந்து.

 சேப்பங்கிழங்கு இலைகளை சாப்பிடுவதால் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம் போன்ற நுண் ஊட்டச் சத்துகள் கிடைக்கிறது.

 பாம்பு கடி, தேள் கடி மற்றும் உணவு நச்சுத் தன்மை அடைய விஷத்தன்மையை முறிக்கும் தன்மையும் உள்ளது. மேலும் வலி நீக்கும் நிவாரணியாக ரத்த கசிவு ஏற்படாமல் இருக்கவும் இதை பயன்படுத்தலாம். சேப்பங்கிழங்கு இலையில் விட்டமின் B இருப்பதால் நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு பலன் தரும்.✍🏼🌹

No comments: