Thursday, June 25, 2020

இருட்டுக்கடை அல்வா வரலாறு...

மிக சிறிய அல்வா கடையாக இருந்த பெயரே இல்லாத இருட்டு கடையை இந்தியாவின் முன்னணி அல்வா கடையாக மாற்றிய புகழுக்கு சொந்தக்காரர்தான் ஹரிசிங்.

இந்தியாவில் பெரிய பிஸ்னஸ் மாடல்கள் இல்லாத காலம். சரியாக சொல்ல வேண்டும் என்றால், சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்த 1940 களில் இந்தியாவில் ஒருவர் சிறிய கடை தொடங்கவே கூட அதிக யோசித்த காலம் அது.

அப்போது பெயரே இல்லாமல் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட இருட்டான கடைதான் இருட்டு கடை.

கடையில் விளக்கு இன்றி, மாலை நேரத்தில் மட்டும் வியாபாரம் நடந்ததால், இருட்டு கடை என்று செல்லமாக அழைக்கப்பட்டு நாடாளடைவில் அதுவே அந்த கடைக்கு பெயரானது

இந்த கடையின் பெயரும், அதன் பின்னணியும், வரலாறும் வியக்க வைக்க கூடிய ஒன்று.

பெரும் பயம்.. கொரோனா தாக்கியதால் மன உளைச்சல்.. இருட்டுக் கடை அல்வா அதிபர் தூக்கிட்டு தற்கொலை

1940களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டது இந்த கடை. இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த கடை முதலில் கடையாகவே தொடக்கப்படவில்லை. ஆம் இந்த திருநெல்வேலி அல்வா என்பதன் பூர்வீகமே ராஜஸ்தான். ராஜஸ்தானில் இருந்து திருநெல்வேலி ஜமீன்தாருக்கு சமைக்க வந்தவர்கள் உருவாக்கியதுதான் இந்த அல்வா.

அங்கிருந்த ராஜ்புத்ராஸ் மக்களின் உணவில் கவரப்பட்ட திருநெல்வேலி ஜமீன்தார், அங்கிருந்து சில சமையல்காரர்களை தமிழகம் வர வைத்தார். அவர்கள் இங்கு வந்து ஜமீனுக்கு உணவு சமைத்து கொடுத்தனர். அப்படி அவர்கள் திருநெல்வேலி கொண்டு வரப்பட்டதுதான் ராஜஸ்தானில் பிரபலமாக இருந்த அல்வா .

தொடக்கத்தில் இவர்கள் வீடு வீடாக இந்த அல்வாவை விற்று வந்தனர்.கடை தொடங்கினார்அதன்பின் மக்களுக்கு அந்த அல்வா பிடித்து போகவே மொத்தமாக கடை தொடங்க அவர்கள் விரும்பினார்கள். இதை தொடர்ந்து 1940ல் பிஜிலி சிங் திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா கடையை தொடங்கினார்.

அப்போது தொடங்கிய பயணம் இப்போதும் நீடிக்கிறது. இந்த கடை தொடங்கப்பட்ட போதே சில மணி நேரங்கள் மட்டும்தான் மாலையில் இயங்கியது.

ஒரு பெரிய காண்டா விளக்கு மட்டுமே இருந்தது . தாமிரபரணி தண்ணீரில் மட்டுமே இந்த அல்வா உருவாக்கப்பட்டது 

இவர்கள் அல்வா செய்யும் முறையே மிகவும் வித்தியாசமானது. ஏனோ அதுதான் கூட உலகம் முழுக்க இந்த அல்வா பிரபலம் அடைய காரணம் என்றும் கூறலாம்.

இப்போதும் கூட இவர்கள் இந்த அல்வாவை கையால்தான் செய்கிறார்கள். ஆம் இந்த அல்வாவை உருவாக்க இவர்கள் எந்திரங்கள் எதையும் பயன்படுத்துவது இல்லை. இதனால்தான் குறைவான அளவில் அல்வா செய்தாலும் அது நிறைவாக இருக்கிறது.

இந்த கடை கொஞ்சம் நேரம்தான் திறந்து இருக்கும். ஆனால் அப்போதும் கூட இந்த கடைக்கு மக்களை கூட்டம் கூட்டமாக வருவார்கள். மாலை ஐந்தரை மணிக்கு இருட்டுக்கடை திறக்கப்படுகிறது. 2 மணி நேரம் கடை திறந்து இருக்கும். அவ்வளவுதான் மொத்தமாக அல்வா விற்று தீர்ந்து விடும். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து அல்வாவை வாங்கி சென்று விடுவார்கள்.

இந்த கடை மூன்று தலைமுறையாக இருக்கிறது. தொடக்கத்தில் என்ன சுவை இருந்ததோ அதே சுவைதான் இப்போதும் அந்த கடையில் உள்ளது. இப்போதும் அவர்கள் தாமிரபரணி தண்ணீரில்தான் அல்வாவை உற்பத்தி செய்கிறார்கள். நெல்லையப்பர் கோயிலை ஒட்டி இருக்கும் இந்த கடை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலம் அடைந்தது. இதற்கு கடைசியில் தற்போதைய உரிமையாளர் ஹரிசிங் மிக முக்கியமான காரணம் ஆவார்.

பெரிய அளவில் பிரபலம்
இருட்டுக்கடை அல்வாவை உலகம் முழுக்க பிரபலப்படுத்தியதில் ஹரிசிங் பங்கு மிக முக்கியமானது. தரம், சுவை, விளம்பரம் இதுதான் ஹரிசிங் வைத்து இருந்த தாரக மந்திரம்.

ஒரு மாவட்டத்திற்கான கடை என்பதை விரிவாக்கி, தமிழகம் முழுமைக்கும் கொண்டு சென்று பிரபலப்படுத்தியவர் ஹரிசிங்தான். ஹரிசிங்கின் திறமையே அவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை என்பதுதான்.போலி கடைகள்இருட்டுக்கடை கொஞ்சம் பிரபலம் ஆன போதே அதை வைத்து பொய்யான போலி கடைகள் நிறைய திறக்கப்பட்டது. பொய்யான தரமற்ற அல்வா வளம் வர தொடங்கியது. ஆனால் மனிதர் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை. அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொண்ட ஹரிசிங், போலியான கடைகளுக்கு நீதிமன்றத்திலேயே தடை வாங்கினார். தன்னுடைய டிரேட் மார்க்கை அவர் எப்போதும் விட்டுக்கொடுத்தது இல்லை .எப்படி வெளிச்சம்இந்த கடையின் முன்னேற்றத்தை அதை வெளிச்சத்தை வைத்து விளக்கலாம். முதலில் காண்டா விளக்கில் செயல்பட்ட இந்த கடை அதன்பின் 40 வால்ட் பல்பிற்கு மாறியது. அதிலும் கூட ஒரே ஒரு பல்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதன்பின் தற்போது 200 வால்ட் பல்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்போதும் கூட அந்த கடை இருட்டாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்க பொருளாதார சரிவு வந்த போதுகூட ஹரிசிங் அனைத்தையும் அமைதியாக எதிர்கொண்டார். எந்த சரிவும் இன்றி கடையை நடத்தினார். பொதுவாக மக்களின் உணவு தேர்வு என்பது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். அப்டேட் ஆகும். ஏனோ திருநெல்வேலி அல்வாவின் சுவையை மட்டுமே ஹரிசிங் மாற்றவே இல்லை. மக்களுக்கும் இது சலிப்பை தரவே இல்லை. எந்த சமரசமும் இன்றி ஹரிசிங் தொடர்ந்து ஒரே ஸ்டைலில் இருட்டுக்கடை அல்வாவை வழங்கி வந்தார்.

நேர்மையாக செயல்பட்டால் ஒரு கடைக்கு விளம்பரமே தேவை இல்லை என்று கூறுவார்கள். அப்படித்தான் மிக மிக சொற்பமான விளம்பரம் மட்டுமே இந்த கடைக்கு செய்யப்பட்டது. மற்றபடி ஹரிசிங் இந்த கடையில் பின்பற்றிய நேர்மை, நியாயம், தூய்மை, தரம்தான் இதன் அமோக விற்பனைக்கு காரணம். இருட்டுக்கடைக்கு வந்த விளம்பரம் எல்லாம் அங்கு வந்த மக்கள் இணையத்தில் கூறியதும், உறவினர்களிடம் கூறியதும்தான். அதிலேயே இந்த கடை உலகப் புகழ்பெற்றது.

ஒரு கடை, அதிலும் சாதாரண அல்வா கடை ஒரு மாவட்டத்தின் அடையாளமாக மாறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. அப்படி ஒரு அடையாளத்தை உருவாக்கி அதை உலகம் முழுக்க கொண்டு செல்வதும், பின் அதை நிலைத்து இருக்க செய்வதும் சாதாரண விஷயம் இல்லை. இதற்கு பின் பெரிய உழைப்பு தேவை. இதை சத்தமே இல்லாமல், எந்த எம்பிஏ கோர்ஸும் படிக்காமல் செய்து முடித்தவர்தான் ஹரிசிங்.

உலகமே மாறினாலும் தாமிரபரணியில் இவர் அல்வா கிண்டுவதை விடுவே இல்லை. அந்த தண்ணீர் எங்கள் அல்வாவிற்கு ஒரு சுவை கொடுக்கிறது. இந்த அல்வா தரமாக இருக்கவும், கெட்டுப்போகாமல் இருக்கவும் தாமிரபரணிதான் காரணம். ஒரு மாதம் கூட இந்த அல்வா கெட்டுப்போகாது. எல்லாம் இந்த நதி கொடுத்த வரம்தான், என்று ஹரிசிங்கே உருக்கமாக பேட்டி அளித்து இருக்கிறார்.

பொருளாதார ரீதியாக பாதிப்பு.
இப்போது ஹரிசிங் கொரோனா காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். எதுவும் அசைக்க முடியாத அவரை கொரோனா அசைத்து பார்த்துள்ளது. அதேபோல் லாக்டவுன் காரணமாக இருட்டுக்கடை பெரிய நஷ்டத்தில் இருந்தது என்றும் கூறுகிறார்கள். பொருளாதார ரீதியான சரிவும் இவரின் தற்கொலைக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

No comments: