Saturday, April 16, 2022

வேலையா? வியாபாரமா?

சீனாவின் பெரிய செல்வந்தர் ஜாக் மா வின் கூற்றின்படி குரங்கிற்கு முன்பாக பணத்தையும் வாழைப்பழத்தையும் வைத்தால் அது வாழைப்பழத்தையே தெரிவு செய்யும். ஏன் என்றால் அதற்கு பணத்தைக் கொண்டு அதிக வாழைப்பழங்களை வாங்கலாம் என்று தெரியாது.

அதே போல் மக்களுக்கு முன் வேலையையும் வியாபாரத்தையும் வைத்தால் பெரும்பாலானோர் வேலையையே தெரிவு செய்வார்கள். ஏன் எனில் அவர்களுக்கு வேலையை விட வியாபாரத்தில் அதிக பணம் ஈட்டலாம் என்பது தெரியாது.

ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்றாக அவர்கள் சுய தொழில் வாய்ப்புகளை அடையாளம் காணக்கூடிய பயிற்சியை பெற்றுக்கொள்ளாமை காணப்படுகிறது.
அவர்கள் பாடசாலைகளில் கூடுதலான நேரத்தை செலவு செய்து கற்றுக்கொள்வது யாதெனில் தமக்காக வேலை செய்யாது மாதாந்த ஊதியத்துக்கான வேலைகளை செய்வதற்கே.

இலாபம் சம்பளத்தை விட சிறந்தது. ஏனெனில் சம்பளம் உங்களுக்கு உதவலாம். ஆனால் இலாபம் உங்களுக்கு உயர்ந்த வாழ்க்கையை தரும்.

நம்மை சுற்றி இருப்பவர்களில் வாழ்க்கையில், வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களை எடுத்து பார்த்தோமென்றால் உங்களுக்கு நன்றாகவே புரியும் அவர்கள் எப்படி இந்த நிலையில் இருக்கிறார்கள் என்று.

எனவே நண்பர்களே! சிந்தித்து செயல்படுங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய எனது வாழ்த்துக்கள்...

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: