Friday, April 15, 2022

இப்படியும் சிலபேர்...

நான் பஸ்ஸில் ஏறினேன்.

உள்ளே இருந்த கூட்டத்தைப் பார்த்து, நான் மிரட்சியானேன்.  

உட்கார இடம் இல்லை. அப்போது, 

ஒரு நபர் தனது இருக்கையை காலி செய்தார். 

காலியான இருக்கைக்கு அருகில் நிற்கும் மனிதர் அங்கே உட்கார்ந்திருக்கலாம், 

ஆனால் அதற்கு பதிலாக அவர் எனக்கு இருக்கையை வழங்கினார்.

அடுத்த நிறுத்தத்தில், மீண்டும் அதே விஷயம் நடந்தது. 

அவர் தனது இருக்கையை இன்னொருவருக்குக் கொடுத்தார். 

முழு பயணத்தின் போதும் இதுபோல 4 முறை நடந்தது. 

அந்த மனிதன் ஒரு சாதாரண தொழிலாளியைப் போல தோற்றமளித்தாா். 

நாள் முழுவதும் வேலை செய்து முடிந்து வீடு திரும்புவா் போல தோன்றியது.

நாங்கள் அனைவரும் இறங்கிய கடைசி நிறுத்தத்தில், 

நான் அவரிடம் பேசினேன்.

 "ஒவ்வொரு முறையும் காலியாக இருக்கை கிடைக்கும்போது ஏன் உங்கள் இருக்கையை வேறொருவருக்கு கொடுக்கிறீர்கள்?"

அவரது பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

"நான் என் வாழ்க்கையில் அதிகம் படித்ததில்லை, 

பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. என்னிடம் அதிக பணம் இல்லை. 

ஆகவே யாருக்கும் அதிகம் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. 

அதனால்தான் இதை நான் தினமும் செய்கிறேன். 

இதை நான் எளிதாக செய்ய முடியும்.

"நாள் முழுவதும் வேலை செய்த பிறகு என்னால் இன்னும் சிறிது நேரம் நிற்க முடியும். 

நான் என் இருக்கையை உங்களுக்கு கொடுத்தேன், 

நீங்கள் நன்றி சொன்னீா்கள். 

நான் ஒருவருக்காக ஏதாவது செய்தேன் என்பது எனக்கு திருப்தி அளிக்கிறது.

 நான் இதை தினமும் செய்கிறேன். 

மேலும் நான் ஏதோ ஒரு வகையில் சமுதாயத்தில் பங்களிப்பு செய்கிறேன் என்று நினைக்கிறேன்.

நான் ஒருவருக்கு எதையாவது கொடுத்த ஒவ்வொரு நாளும் நான் புத்துணர்ச்சியுடன் வீட்டிற்குச் செல்கிறேன். "

இதைக்கேட்டதும் எனக்கு பேச்சு மறந்தது. அவாின் செயல் மற்றும் எண்ணங்கள் எனக்கு ஆச்சாியத்தை தந்தது.

தினசரி யாரோ ஒருவருக்கும், இயலாதவா்களுக்கும்,
ஏனைய உயிா்களுக்கும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற அவாின் செய்தி என் இதயத்தில் பாய்ந்தது.

அந்த நபா் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருந்தாா்.

பணக்காரராக இருப்பது பொிதல்ல. 

குறிப்பாக
அழகான உடைகள், வங்கிக் கணக்கில் நிறைய பணம், விலையுயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் அதனால் ஏற்படும் ஆடம்பரங்கள், கல்விப் பட்டங்கள் கூட உங்களை பணக்காரர்களாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க செய்யாது.  

ஆனால் தினமும் பணக்காரராகவும் மகிழ்ச்சியாகவும் உணர ஒரு சிறிய செயல் போதுமானது என்பதை உணா்ந்தேன். அன்று முதல் மாறினேன்... 

No comments: