Monday, April 25, 2022

பிறர்வாட பல செயல்கள் செய்து!!!

என்னை அப்படி / இப்படி பேசுகிறார்கள்...  இப்படி / அப்படியெல்லாம் நினைக்கிறார்கள்... ரொம்ப வருத்தமாக இருக்கு என்ன செய்ய!!!

ஒருவரது சொத்து என்பது அவரிடம் இருப்பது மட்டும் இல்லை, அவர் வெளிபடுத்துவதும் அவர் சொத்துதானே? 

எச்சில் துப்பினால் தண்டனை துப்பியவனுக்கா? அல்லது எற்றுக்கொண்டவனுக்கா?

அவன் சொத்தை, உரிமையை வெளிபடுத்துகிறான்... அதில் 
நீங்கள் போய் வழியே இது எனக்கு தான் என்று ஏற்றுக்கொண்டு, உங்கள் விருப்பம் போல வருந்த வேண்டும்?

அவன் சொத்துக்கு நீங்கள் ஏன் உரிமை பாராட்ட வேண்டும்?

குப்பைக்கு சொந்தகாரனுக்கு இல்லாத உரிமையா உங்களுக்கு?

சிலர் சொல்வது, வெளிபடுத்துவது வெளியே தெரிகிறது ஆனால் உங்களுடனே வாழ்ந்து உங்களுக்கானத்தை கூட அனுபவித்துக்கொண்டே வெளியே தெரியாத எண்ணங்கள் ஏராளம்!

அது அது அவரவர் வெளிபாடு...
நீங்களாகவே வழிய போய் இது எனக்கானது என்று உரிமை ஏன் கொண்டாட வேண்டும்?
அப்படியே உங்களைத்தான் சொன்னேன் என்று சொன்னால் கூட அதை நீங்கள் எடுத்துகொள்ளத்தான் வேண்டும் என்று அவசியம் இல்லையே!

ஒருவர் உங்களுக்குத்தான் என்று பழங்களை கொடுக்கிறார் அதை அத்தனையையும் ஏற்கும் அல்லது மறுக்கும் அல்லது ஒதுக்கும் அல்லது கண்டுகொள்ளாது விடும் உரிமை உங்களிடம் இருக்கிறது தானே!

அழுகிய பழத்தை பார்த்தும், நுகர்ந்தும், சுவைத்தும், அனுபவிக்க விரும்பி வருந்தி கொள்கிறீர்கள் அவ்வளவே!!!

உங்கள் விருப்பம் பிறர் இடும் குப்பை பொறுக்கவா? என்பது உங்கள் உரிமை அவ்வளவே...

No comments: