மீன் முள் உங்கள் தொண்டையில் மாட்டிக் கொள்வது ஒரு சாதாரண பிரச்சனை. ஆனால் நாம் என்ன செய்வோம் ஒன்று முள்ளை எடுக்க முயற்சிப்போம். இல்லையென்றால் உள்ளே தள்ள முயற்சிப்போம். இப்படி செய்வதால் தான் பெரிய பிரச்சினையே உருவாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். உள்ளே தள்ள எதையாவது எடுத்து தொண்டையில் குத்துவது அல்லது வெளியே எடுக்க ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்துவது பிறகு அவைகள் தொண்டையில் சிக்கி அறுவை சிகிச்சை செய்யும் நிலை வந்து விடுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இந்த மாதிரியான முயற்சிகளை மக்கள் தவிர்க்க வேண்டும். அதனால் தான் சிக்கிக் கொண்ட மீன் முள்ளை எடுக்க சில உதவுக் குறிப்புகள் உங்களுக்காக.
முள் சிக்கிய பிறகு ஏற்படும் அறிகுறிகள்
கழுத்தில் சுருக் சுருக்கென்று வலி.
இருமல் உணவை விழுங்க முடியாது.
இருமலில் இரத்தம் வருதல்.
தொண்டையில் அசெளகரியம் தென்படும்.
தொண்டையில் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டு இருக்கும்.
தொண்டையில் சிக்கிக் கொண்ட மீன் முள்ளை எப்படி இயற்கையான வழியில் வெளியேற்றலாம் என்று தெரிந்து கொள்ளலாம். நீங்கள் பதட்டப்பட்டோ பயப்பட்டோ எதையாவது செய்கிறேன் என்று நன்கு உள்ளே குத்தி விட்டு விடாதீர்கள். அது மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்குக் கொண்டு போய் விட்டு விடும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் மீன் முள்ளை எடுக்க ஒரு சிறந்த பொருள். ஒரு பெரிய துண்டு அளவு வாழைப்பழத்தை கடித்து சிறுது நிமிடம் தொண்டையில் வைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பழம் அப்படியே வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் தொண்டையில் மாட்டிக் கொண்ட மீன் முள்ளையும் சேர்த்து வயிற்றுக்கு தள்ளி விடும். பிறகு வயிற்றில் எளிதாக செரிமானம் ஆகி விடும்.
சாதம்
இது ஒரு மிகச் சிறந்த வழி. மீன் முள் தொண்டையில் மாட்டிக் கொண்டால் சாதத்தை உருட்டி முழுங்குங்கள். சாதம் தொண்டைக்குள் இறங்கும் போது மீன் முள்ளையும் வயிற்றுக்குள் தள்ளி விடும்.
தண்ணீர் மற்றும் உப்பு
தொண்டையில் சிறிய மீன் முள் மாட்டிக் கொண்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு குடியுங்கள். முள் இறங்கி விடும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் இயற்கையாகவே நல்ல பிசுபிசுப்பு தன்மை கொண்டது. இதுவும் நம்ம தொண்டையில் மாட்டிக் கொண்ட முள்ளை எடுக்க உதவி செய்கிறது. தொண்டையில் மீன் முள் மாட்டிக் கொண்டால் 1-2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விழுங்க வேண்டும். இதன் வழுவழுப்பு தன்மை போகும் போது முள்ளையும் சேர்த்து வழுக்கிக் கொண்டு வயிற்றில் சேர்த்து விடும்.
இருமல்
சில சமயம் தொண்டையில் முள் மாட்டிக் கொண்டால் இயற்கையாகவே இருமல் வரும். இதுவும் ஒரு நல்ல டெக்னிக் தான். இப்படி இரும்பும் போது சிக்கிய முள் தொண்டையிலிருந்து வெளியேறி வாய்க்கு வந்து விடும். பிறகு எடுத்து நீங்கள் கீழே போட்டு விடலாம்.
பிரட் மற்றும் தண்ணீர்
இந்த முறை உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் நிறைய பேர் இதில் பலனடைந்து உள்ளனர். ஒரு பிரட் துண்டை பெரிய கடி கடித்து தண்ணீரில் அதை முக்கி வேகமாக முழுங்குங்கள். இந்த பெரிய பிரட் துண்டு ஈஸியா மீன் முள்ளை வயிற்றுக்கு தள்ளி விடும்.
சோடாவினிகர்
உங்களுக்கு தெரியும் வினிகர் ஒரு அசிட்டிக் திரவம். இதை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது அது தொண்டையில் சிக்கிய மீன் முள்ளை உடைத்து எளிதாக வயிற்றுக்குள் தள்ளி விடுகின்றன. 2 ஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து 1 ஸ்பூன் மட்டும் எடுத்து குடியுங்கள்.
சோடா
பல வருடங்களாக சுகாதார பயிற்சியாளர்கள் தொண்டையில் சிக்கிய மீன் முள்ளை எடுக்க கார்பனேட்டேடு பானங்களைக் கொண்டு சிகச்சை அளிக்கிறார்கள். சோடா பருகும் அதிலுள்ள வாயு தொண்டையில் சிக்கிய முள்ளுக்கு அழுத்தத்தை கொடுத்து வெளியேற்றி விடுகிறது.
முள் மாட்டுவதை எப்படி தவிர்ப்பது
மீனை தனி தட்டில் வைத்து சாப்பிடுங்கள்
சில நேரங்களில் நாம் சாப்பிடும் தட்டில் மீனை வைக்கும் போது அதன் முள் சாதத்துடன் கலந்து விட வாய்ப்புள்ளது. தெரியாமல் நாமும் விழுங்கி விடுவோம். எனவே மீனை தனியாக வைத்து மெதுவாக எடுத்து குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.
மீனை குழைய விடாதீர்கள்
அதே மாதிரி மீன் குழம்பு வைக்கும் போது மீனை ரெம்ப நேரம் சமைத்தால் கிளறி சதை தனியா முள் தனியா போய் விடும். இது தெரியாமல் முள்ளை சாப்பிட வழி வகுக்கும். எனவே மீன் குழம்பு வைக்கும் போது கடைசியாக மீனை போட்டு 5 நிமிடங்கள் வேக விடுங்கள் போதும்.
டாக்டரை எப்போது அணுக வேண்டும்
அதிகப்படியான இரத்த போக்கு, தொண்டையில் கடுமையான வலி, அடைப்பு காயங்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
எதையும் மேம்போக்காக விட வேண்டாம். கவனத்துடன் மருத்துவரை அணுகுவது மற்ற பிரச்சனைகளிலிருந்து உங்களை காக்கும்.
மேலே சொன்ன எந்த விஷயத்தைச் செய்தும் மீன் முள்ளை தொண்டையில் இருந்து எடுக்க முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி, அதை நீக்கச் சொல்லுங்கள். நீங்களே கையை விட்டு எடுக்கிறேன் என்று ஏதாவது செய்து இன்னும் சிக்கலாக்கி விடாதீர்கள்.
No comments:
Post a Comment