எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் சில உணர்வுகளை
கட்டுப்படுத்தினாலே போதும். பிரச்சனைகளை தவிர்த்து விடலாம்.
சிலரை அருகில் இழுத்தணைத்துகொள்வது பெரும் நேசம், சந்தோஷம் சிலரை தொலைவில் ரசனையிலிருத்தி மட்டுமே பார்ப்பது பெரும் நிம்மதி.
கோபம் கொள்ளும் தருணங்களின் ஏழைகளாக இருப்போம். அன்பு கொள்ளும் தருனத்தில் பணக்காரர்களாக இருப்போம்.
ஒருவர் மட்டம் தட்ட தட்ட உங்கள் மனது மட்டம் தட்ட படுகிற தரையை போல பலமானதாக மாறிவிடும்.
நீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி, நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் "தன்னம்பிக்கை" என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.
உங்கள் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் அன்புக்குரியோரிடம் திணிக்காதீர்கள்.
அவர்கள் அதை புரிந்தும் கொள்ளலாம்... பிரிந்தும் செல்லலாம்!
நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் உங்களை விட்டு விலகி சென்றவர்கள் அத்தனை பேருக்கும் #குட்பாய் போட்டு விடுங்கள்.
ஒருத்தவங்களோட முழு முகமும் தெரியுற வரையிலும் அவங்க அழகானவங்கதான்.
வெற்றி பெற்றவர்களை விட தோல்வி
அடைந்தவர்களிடம் தான் அதிக பதில்கள் இருக்கும்.!
வயது வெறும் நம்பர்தான் மறந்துவிடாதீர்கள். சந்தோசமாக இருப்பதற்கு வயது ஒரு தடை கிடையாது.
யார் என்ன நினைப்பார்களோ
என்று எண்ணி எண்ணி, நாம் நாமாக இருப்பதை தவிர்த்துவிடுகிறோம்.
யாருக்கும் தொல்லை தராத எல்லா சந்தோசங்களையும் அனுபவிப்போம்.
No comments:
Post a Comment