தவிக்கப் போகிறான்!
¶காலையில் எழுப்பிட
அப்பா வேண்டாம்
- alarm app இருக்கு!
¶நடைபயிற்சிக்கு
நண்பன் வேண்டாம்
- step counter இருக்கு!
¶சமைத்து தந்திட
அம்மா வேண்டாம்
- zomato, swiggy app இருக்கு!
¶பயணம் செய்ய
பேருந்து வேண்டாம்
- uber,ola app இருக்கு!
¶விலாசம் அறிய
டீ கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம்
-google map இருக்கு!
¶மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம்
- big basket இருக்கு!
¶துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக வேண்டாம்
-amazon , flipkart app இருக்கு!
¶நேரில் சிரித்து பேசிட
நண்பன் வேண்டாம்
- whatsapp, facebook இருக்கு!
¶கைமாறாக பணம் வாங்க
பங்காளியும், அங்காளியும்
தேவையில்லை
- paytm app இருக்கு!
¶மற்றும்
பல தகவலுக்கு நம்ம
-google டமாரம் இருக்கு!
¶இப்படி தனித்து வாழ்ந்திட
அனைத்தும் இருக்கு.....
-app என்னும் ஆப்பு!!!
¶உள்ளங்கை நெல்லிக்கனியென
நீ நினைக்க!
¶விரித்திருப்பதோ மீள முடியாத
வலைதளம்.!
சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்!
¶விழித்தெழு
விடை கொடு..!
¶செல்லின அடிமைகளாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து
ஒரு வலை பின்னுவோம்...!
படித்ததில் பிடித்தது
No comments:
Post a Comment