Thursday, June 15, 2017

“பிரமிடின் அடித்தட்டில் இருந்தவன் நான். இப்போது உச்சியில் இருக்கிறேன்”

முகப்பு வெற்றிக்கதைகள்
பி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 9 மும்பை 07-Jun-2017
ஆரோக்கியசாமி வேலுமணிக்கு 57 வயது. 3600 கோடி ரூபாய் மதிப்புள்ள தைரோகேர் லிமிடட் நிறுவன தலைவர். மற்றவர்களைப் போல் அல்லாமல் இவர் ஒரு மாறுபட்ட தொழிலதிபர்.
வழக்கமான முறைகளைப் பின்பற்றி அவர் தொழில் செய்வது இல்லை. உதாரணத்துக்கு எல்லோரும் அனுபவம் உள்ள தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க விரும்புவார்கள். ஆனால் இவர் அனுபவமே இல்லாதவர்களைத் தான் வேலைக்கு எடுப்பார். அதை ஒரு கொள்கையாக வைத்துள்ளார்.
ஆரோக்கியசாமி வேலுமணி, தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடட் நிறுவனத்தின் தலைவர், கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ( படங்கள்: ஹெச்.கே. ராஜசேகர்)
“என்னிடம் 1000 பேர் வேலை செய்கிறார்கள். பெரும்பாலும் அனைவருக்குமே முதல் வேலை நான் கொடுத்ததுதான்.  இவர்களில் இரண்டு சதவீதம் பேருக்குத்தான் முன் அனுபவம் உண்டு,” என்கிறார் வேலுமணி. நவி மும்பையில் உள்ள ஆறு மாடிக் கட்டட அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள அவரது அறையில் நமது சந்திப்பு நடந்தது.  அவரிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் சராசரி வயது 25. சராசரி சம்பளம் ஆண்டுக்கு 2.7 லட்சம். 2015-16-ல் இந்நிறுவனம் 235 கோடி ரூபாய் வர்த்தகம் செய்துள்ளது.
நாட்டில் 1,200 தைரோகேர் மையங்கள் உள்ளன. நோயாளிகள், மருத்துவமனைகளில் இருந்து ரத்த மாதிரிகள் நேரடியாகப் பெறப்பட்டு, அவை விமானம் மூலம் மும்பையில் உள்ள அவர்களின் தானியங்கி ஆய்வகத்துக்கு சோதனைக்கு அனுப்பப்படுகின்றன. “தைராய்டு பரிசோதனை சந்தையில் நாங்கள் பத்து சதவீதம் வைத்துள்ளோம்,” என்கிறார் வேலுமணி.  .
வேலுமணி முதல் தலைமுறை தொழிலதிபர். கிராமத்தில் வறுமையில் வளர்ந்தவர். அவர் பள்ளி நேரம் முடிந்ததும் வயல்களில் வேலை செய்யவே�

No comments: