அன்புள்ள ஆசிரியருக்கு...
''இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குப் பாடங்கள் தவிர்த்து ஆசிரியர்கள் வேறு எதாவது கற்பிக்க வேண்டும் என விரும்புகிறார்களா?''
''இன்றைய பெற்றோர் விரும்புகிறார்களோ இல்லையோ, ஒரு பிரபலமான அப்பா தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய இந்தக் கடிதத்தின் சுருக்கத்தைப் படித்துப் பாருங்கள்...
'உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டாலர், உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டாலரைவிட மதிப்பானது என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
அவனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள். அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தையும் எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதையும் புரியவையுங்கள்.
புத்தகம் என்னும் அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.
ஏமாற்றுவதைவிடத் தோல்வி அடைவது மேலென்று புரியவையுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும் முரடர் களிடம் கடினமாகவும் அணுகுவதற்குப் பயிற்சி கொடுங்கள்.
கும்பலோடு கும்பலாகக் கரைந்துவிடாமல் எந்தச் சூழலிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங் கள்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்றும் கண்ணீர்விடுவதில் தவறு இல்லை என்றும் கற்றுக்கொடுங்கள்.
அவன் தன் மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் நம்பிக்கை கொள்வான்.
இவற்றில் உமக்கு எவை எல்லாம் சாத்தியமோ அவற்றை எல்லாம் அவனுக் குக் கற்றுக்கொடுங்கள்.
அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்!’ என்று முடிக்கிறார்.
அந்தப் பிரபலம், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன்!''
படித்தேன் பிடித்தது பகிற்கிறேன்
No comments:
Post a Comment