மருந்து ஒன்று
சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிவனார் அமிர்தம் ஒரு சிட்டிகை தேனில் குழைத்து தினமும் காலை மாலை உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.
மருந்து இரண்டு
சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆடாதோடை மணப் பாகு
ஒரு தேக்கரண்டி தினமும் காலை மாலை உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும் அல்லது ஆடாதோடை இலைகள் அதிமதுரம் சேர்த்துத் தீநீராகி பனை வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.
ஒரு தேக்கரண்டி தினமும் காலை மாலை உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும் அல்லது ஆடாதோடை இலைகள் அதிமதுரம் சேர்த்துத் தீநீராகி பனை வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.
மருந்து மூன்று
வெள்ளை எருக்கம் பூக்களின் இதழ்கள் மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் காய வைத்து வேளைக்கு இரண்டு மாத்திரைகள் என தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர ஆஸ்துமா குணமாகும்.
மருந்து நான்கு
ஆஸ்துமா நோயின் தாக்குதல் இல்லாத காலங்களில் நஞ்சறுப்பான் கொடி ( சாணிப்பால் ) பத்து இலைகள் உடன் கால் தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் சாப்பிட்டு வர சாப்பிட முழுமையான குணம் கிடைக்கும் மறுபடி இந்த நோய் திரும்ப வரவே வராது அனுபவத்தில் உணரப் பட்ட மருந்து இது.
மருந்து ஐந்து
வெள்ளைக் கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணையில் சேர்த்துக் காய்ச்சி தைலமாக்கி ஆஸ்துமா நோய் தாக்குதல் இல்லாத காலங்களில் ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் ஒரு தேக்கரண்டி தைலம் தினமும் காலை மாலை உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும் பிற்காலத்தில் ஆஸ்துமா வரவே வராது.
மருந்து ஆறு
நாயுருவி செடியை நிழலில் உலர்த்தி நெருப்பில் கொளுத்தி சாம்பலாக்கி கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து தினமும் காலை மாலை உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டு வர ஒரு மண்டலத்தில் ஆஸ்துமா தொல்லை அறவே நீங்கும்.
மருந்து ஏழு
கண்டங்கத்தரி பொடியை தீநீராக்கி ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்துக் குடித்து வர ஆஸ்துமா குணமாகும்.
மருந்து எட்டு
இரண்டு தேக்கரண்டி ஆடாதொடைப் பொடியுடன் பனை வெல்லப் பாகு சேர்த்துக் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.
மருந்து ஒன்பது
சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும் தேற்றான்கொட்டை லேகியம் சாப்பிட்டு வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.
மருந்து பத்து
சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும் திப்பிலி இரசாயனம் சாப்பிட்டு வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.
மருந்து பதினொன்று
சித்தா மருந்துக் கடைகளில் கிடைக்கும் கண்டங்கத்தரி லேகியம் சாப்பிட்டு வர ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.
மருந்து பன்னிரண்டு
இஞ்சி சாறு ........... ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காய சாறு ........... ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு ........... ஒரு தேக்கரண்டி
மூன்று சாறுகளையும் ஒன்றாக சேர்த்துக் கலந்து தினமும் காலை மாலை உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்துக் குடித்துவர ஆஸ்துமா என்னும் இளைப்பிருமல் நோய் குணமாகும் ஒவ்வொரு முறையும் புதிதாக செய்து குடிக்க வேண்டும் ஏற்கெனவே செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் நோய் குணமாகாது.
சின்ன வெங்காய சாறு ........... ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு ........... ஒரு தேக்கரண்டி
மூன்று சாறுகளையும் ஒன்றாக சேர்த்துக் கலந்து தினமும் காலை மாலை உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்துக் குடித்துவர ஆஸ்துமா என்னும் இளைப்பிருமல் நோய் குணமாகும் ஒவ்வொரு முறையும் புதிதாக செய்து குடிக்க வேண்டும் ஏற்கெனவே செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் நோய் குணமாகாது.
மருந்து பதின்மூன்று
முசுமுசுக்கை இலை சாறு ...... ஐம்பது மில்லி
செக்கு நல்லெண்ணை .........நூறு மில்லி
செக்கு நல்லெண்ணை .........நூறு மில்லி
நூறு மில்லி செக்கு நல்லெண்ணையை நன்கு காய்ச்சி மிதமான சூட்டில் முசுமுசுக்கை இலை சாறு ஐம்பது மில்லியை சிறிது சிறிதாக சேர்த்துக் கொதிக்க வைத்துத் தைலப் பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து வடிகட்டி சேமிக்கவும் வாரம் ஒரு முறை இந்த முசுமுசுக்கைத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்து குளித்து சீகைக்காய் கொண்டு கழுவி வர ஆஸ்துமா நோய் குணமாகும்
குறிப்பு
இத்தனை மருந்துகள் சொல்லியிருக்கிறீர்களே எதை சாப்பிடுவது என்று கேட்பவர்களுக்கு உங்களுக்கு அருகாமையில் எது கிடைக்கிறதோ எந்த மருந்து உங்களுக்கு ஒத்துக் கொள்கிறதோ எந்த மருந்து சாப்பிடும் போது உங்களுக்கு குணம் ஆகி வருகிறது என்ற மன நிலை தோன்றுகிறதோ அந்த மருந்தைத் தொடர்ந்து சாப்பிட்டுக் குணமடையுங்கள்
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்
1 comment:
asthma with wheezing ad cough. Please tell which medicine to be taken
Post a Comment