Sunday, August 27, 2017

குட்டிக்கதை - அமைதி

நாட்டில் 🏰அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு 💰சன்மானம் அளிப்பது அந்த 🤴🏻மன்னனின் வழக்கம்.
ஒரு முறை 🖼அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான 🎨ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த 🎁பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். 🗣
இதையடுத்து 🏰நாட்டின் முன்னணி 👨🏻‍🎨👩🏻‍🎨👨🏽‍🎨👩🏽‍🎨ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை 🖌வரைந்து 🏯அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
🤴🏻மன்னன் ஒவ்வொரு ஓவியமாக 👀பார்வையிட்டுக் கொண்டே வந்தான். 🖼அமைதியை ஒவ்வொரு 👨🏻‍🎨👨🏽‍🎨ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர்👨🏽‍🎨 அழகான 🏞ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. 🏞மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.
மற்றொருவர்👨🏻‍🎨 மலர்களை🌺💐🌸🌼 வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு 🎨ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.
ஒரு ஓவியத்தில் ஒரு 🏔மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் ⛲நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது.
அதுமட்டுமா இடியுடன் ⛈மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த 🌳மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த 🐤பறவை ஒன்று கூட்டில் தனது 🐥🐥🐥குஞ்சுகளுடன் காணப்பட்டது. *இந்த ஓவியத்தை வரைந்தது யார்?*
சம்பந்தப்பட்ட 👨🏼‍🎨ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆக்ரோஷத்துடன் கொட்டும் ⛲அருவி, இடியுடன் கூடிய மழை…⛈ கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை….🐤 ஆனால் இதில் 🙂அமைதி எங்கே இருக்கிறது?. 🤴🏻மன்னா 🔊சப்தமும், 😤பிரச்னையும், 🤺போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது 🙂அமைதி அல்ல..., இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் 😥கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள்❣ அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!
அப்படி பார்க்கும்போது 🐥🐥🐥குஞ்சுகளுடன் இருக்கும் இந்த 🐤பறவையே பரிபூரணமான 🙂அமைதியில் இருக்கிறது!!
👏🏻சபாஷ்… அமைதிக்கு🙂 ஒரு அற்புதமான விளக்கம் கைதட்டிய👏🏻👏🏻 🤴🏻மன்னன் அந்த 🎨🖌ஓவியத்திற்கே முதல் 🥇🏆பரிசு கொடுத்தான்.

No comments: