Saturday, April 21, 2018

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின் விளைவு...! மனச கொஞ்ச  தேத்திக்குங்க...!

_பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரிப்பு..!_

_*புலனாய்வுப் பிரிவு அதிர்ச்சி தகவல்..!*_

_பிரதமர் மோடி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர் மதிப்புடைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து புதிய ரூ.2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது._

_இதற்கான காரணத்தை கேட்ட போது, கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கூறியது_

_அதன் தொடர்ச்சியாக பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது._

_தெருவோர கடைகளிலிருந்து சிறு நிறுவனங்கள் வரை மிகவும் பாதிப்புக்குளாயின. இன்னும் அந்த பின்னடைவிலிருந்து மீளாதவர்களும் உண்டு ._

_தங்களது பணத்தை மாற்றுவதற்கும், தங்களுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்கும் வங்கிகள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. அப்போது வரிசையில் காத்திருந்த அப்பாவி மக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். நாட்டின் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என்று சிலர் தெரிவித்திருந்தனர், ஆனாலும் இதுவரை நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை._

_*இந்நிலையில், உயர் மதிப்புடைய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதிகளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாக மத்திய அரசின் அங்கமான நிதி நுண்ணறிவு (புலனாய்வுப் பிரிவு) ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது.*_

_மேலும், புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்களின் அளவு 2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 480 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது._

_மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் ரூ.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது._

_ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புலனாய்வு பிரிவின் இந்த அறிக்கை மேலும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது._

_பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நியாயப்படுத்த ," காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியும் சம்பவங்கள் குறைந்துவிட்டது. அதுவரை கல்வீச்சில் ஈடுபடுவதற்காக இளைஞர்களுக்குப் பணம் கொடுத்து வந்தவர்களிடம் பணம் இல்லாமல் போனது. அதன் காரணமாக அவர்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு 8 முதல் 10 மாதங்கள் வரை 100 இளைஞர்களைக் கூட திரட்ட முடியவில்லை" என்று ஆளும் கட்சியினர் அள்ளி வீசினர்._

_இது போன்ற ஒரு நடவடிக்கை வேண்டாம் என்றும், கள்ள பணத்தை கட்டுப்படுத்த அதைவிட மேலான யோசனை இருப்பதாய் , முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சொன்னதை அலட்சியப்படுத்தினர். இன்று கிட்டத்தட்ட 5 மடங்கு கள்ள பணம் புழக்கத்தில் உள்ளது என்று சொல்லும் போது ....விமர்சிக்க வார்த்தை கிடைக்காமல் , ரகுராம் ராஜனின் வார்த்தையை அப்படியே கடன் வாங்கி உரக்க சொல்லுவோம்..._ _*"பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டால் அது இளவரசி ஆகிவிடாது.."*_
😀😀😀😀😀😀😀

CLICK HERE TO READ MORE GOOD INFORMATIONS

No comments: